Main Menu

யாரழிவார் நீரிழிவால்?(நீரிழிவு தினத்திற்கான சிறப்புக்கவி )

விழிப்புணர்வை ஏற்படுத்த
வழி சமைத்த ஐ.நா.வே
கார்த்திகை பதின்நான்கினை
நீரிழிவு தினமாக்கி
உயிரழிவினைத் தடுக்கவும்
அறியாமை இருளில் இருந்து
மக்களை விழிப்படைய செய்யவும்
ஆக்கி வைத்த உம் பணிக்கு நன்றி !

வாழ்வியல் நகர்வில்
வீட்டிற்கு ஒருவரென
விடாமல் துரத்துகிறது நீரிழிவு
உலகையே அச்சுறுத்தி
சீரிய வாழ்வினைச் சீர்குலைத்து
பாரிய பக்க விளைவுகளை
பலரும் அனுபவிக்கின்றனரே !

யாரழிவார் நீரிழிவால்
யான் ஒன்றும் அறியேன் பராபரமே
வந்த பின் வருந்தாமல்
வருமுன் காத்திடுவோம்
சக்கரை அளவைக் குறைத்து
சத்தான உணவுகளை
நித்தமும் சேர்த்திட்டால்
எந்த இழிவும் நெருங்கிடாதே எம்மை !

யார் எவர் என்ற பேதமின்றி
பரம்பரையாகவும் பரம்பரை இன்றியும்
ஒட்டாமலே ஒட்டிக் கொள்கிறது நீரிழிவு
உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும்
உடல் எடைக் குறைப்பும்
நோயற்ற வாழ்விற்கு வழிகாட்டும் !

விழிப்போடு நாம் செயற்பட்டால்
அளவோடு நாம் உண்டிட்டால்
ஆரோக்கியமாய் வாழ்ந்திட்டால்
கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால்
நெருங்காதே எமை நீரிழிவு
அழியாரே யாரும் நீரிழிவால் !

கவியாக்கம்…….ரஜனி அன்ரன்

பகிரவும்...