Main Menu

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்- பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனை ஆந்திராவிற்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் திருப்பி விடப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துசென்றால் தமிழகத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்.

இதனால் தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்திற்கு 220 மெ.டன் ஆக்சிஜன் போதும் என மத்திய அரசு தவறான கணக்கீடு செய்துள்ளது. தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டால் தமிழகத்திற்கு 310 மெ.டன் ஆக்சிஜன் தேவைப்படும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

பகிரவும்...