Main Menu

” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை)

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமதில்
அன்னை மண்ணாம் சிறுப்பிட்டியில்
அவதரித்தார் தாமோதரனார்
புரட்டாதித் திங்கள் பன்னிரெண்டிலே !

அன்னை மொழியாம் எம் தமிழை
அழிய விடாது பேணிக் காத்து
தமிழின் அருமை பெருமைகளை
எதிர்கால சமூகத்திற்கு எடுத்தியம்பிய செம்மல்
தமிழ் மொழியின் அழியாச் சொத்து
தமிழ் நூற்பதிப்புப் பணியின் தலைமகனும் இவரே !

தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி
பதிப்புலகத்தின் இமயம்
செல்லரித்த செந்தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு
புது வாழ்வு கொடுத்த தமிழ் வித்தகன்
சங்கத் தமிழ் நூல்களை தேடித் தேடி மீட்டு
அச்சிட்டு வாழ வைத்த ஆசான் !

சென்னைப் பல்கலைக்கழகம் சென்று கற்று
முதன் முதலில் நடந்த கலைமாணிப் பரீட்சையில்
முதல் மாணவனாய்த் தேறி
முத்தாரம் பதித்தார் தமிழுக்கு
பழந்தமிழ் நூல்களையெல்லாம் பதிப்பித்து
தமிழ் அன்னைக்கு எழிற் கோலத்தைக் கொடுத்தாரே
பதிப்புத் துறையின் தலைமகன் சி.வை.தாமோதரம்பிள்ளை !

ரஜனி அன்ரன் (B.A) 12.09.2019

பகிரவும்...