Main Menu

“சுவாமி விவேகானந்தர்”

தைத்திங்கள் 12இல் கல்கத்தாவில் உதித்து
வங்காள மொழியை தாய்மொழியாக்கி
ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திலும்
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்
தியாகத்தின் ஆதாரமாய் திகழ்ந்து
இருண்டு கிடந்த இந்தியாவுக்கு
கலங்கரை விளக்காய் ஒளிர்ந்தாரே !

இந்தியாவின் சிறந்த சமயத் துறவியாகி
இராமகிருஷ்ணரின் தலைமைச் சீடராகி
இராமகிருஷ்ண மிஷனையும் நிறுவி
இவரின் சொற்பொழிவுகளும் சிந்தனைகளும்
இளைஞர்களை எழிற்சிபெற வைத்ததே !

மக்கள் சேவையே மகேசன் சேவையெனவும்
மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்றும்
மனித வாழ்வின் சாரமே தெய்வீகமென்றும்
மகத்துவமாய் பொழிந்து நின்றார் உரையினிலே
சிக்காக்கோ உலகச் சமய மகாநாட்டில்
சுவாமிகளின் சொற்பொழிவு உலகப் புகழ்பெற்று
உலக வரலாற்றில் தடம் பதித்ததே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...