Main Menu

“காவியக் கவிஞர் தாகூர் “(நினைவுக்கவி) கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A).

வங்காள மொழிக் கவிஞர்
திங்களாம் ஆனி ஏழில் உதித்து
ஆவணித் திங்கள் ஏழில்
மறைந்தாரே இவ்வுலகை விட்டு !

படைத்தாரே படைப்புக்கள் பலவற்றை
பாங்காகப் படைத்த கீதாஞ்சலிக்காக
சான்றாகப் பெற்றார் நோபல்ப் பரிசினை
ஆசியாவில் முதல் நோபல் பரிசினை
இலக்கியத்திற்காய் சுவீகரித்த மகானும் இவரே !

இந்திய தேசீய கீதத்தையும்
வங்கதேச தேசீய கீதத்தையும்
ஆக்கிய பெருமை இவரையே சாரும்
பூமகளும் நாமகளும் நாவில் நர்த்தனமாட
கவிதை,நாடகம், நாவல்,கதையென
ஆயிரமாயிரம் படைப்புக்கள் காவியம் படைத்தனவே!

பாரதியைப் போலவே இவரும் தேசக்கவி
தேசபிதா காந்தி மீதும் கொண்டார் மதிப்பு
மகாத்மா என்ற பட்டத்தையும் சூட்டினார் காந்திக்கு
மகாபாரத இராமாயண காவியங்களைப் போல
மகான் தாகூரின் கீதாஞ்சலிக் காவியமும்
மகிமை பெற்றதே இலக்கிய உலகில்
கொள்ளை கொண்டதே மக்கள் மனதையும் !

பகிரவும்...