Main Menu

“உழைப்பே ஊன்றுகோலாக”

தன்மானத்தோடு நாம் வாழ
தன்முனைப்போடு வீறுநடை போட
தேவைகளை நிறைவேற்றிட
உடலைப் பலப்படுத்த
உலகினை வளப்படுத்த
வாழ்வினை மாற்றும் திறவுகோல்
உழைப்பு எனும் ஊன்றுகோலே !

வாழ்க்கைப் படகில் பயணிக்க
துடுப்பாகுமே உழைப்பு
சாதனை ஏட்டைத் தொட்டுவிட
தூண்டுகோலாகுமே உழைப்பு
உழைப்பிற்கு கிடைக்குமே வேதனம்
ஊன்றுகோலாகுமே வாழ்விற்கு உழைப்பு !

பொருளாதாரத் தேர் அசைய
வாழ்வாதாரம் வலுப்பெற
ஜீவாதாரம் பேணப்பட
வேண்டுமே உழைப்பு
உழைப்பாளியே உலகின் வழிகாட்டி
உழைப்பே வாழ்வின் திசைகாட்டி
உழைப்பே வாழ்வின் ஊன்றுகோல் !

உழைப்பு மேன்மைக்கு ஒரு அழைப்பு
உயர்விற்கு இது வழிவகுப்பு
தாழ்விற்கு இது விதிவிலக்கு
தரத்திலே இது தனிவகுப்பு
அலுப்புக்கு ஒரு விடுப்பு
இதுவே உழைப்பின் ஊன்றுகோல் !

உழைப்பிருந்தால் வாழ்வு வனப்பு
உழைப்பில்லையேல் வருமே சினப்பு
உனக்கும் வருமே பொறுப்பு
உழைக்கிறேன் நானும் சிறுவர் பள்ளியில்
உணர்கிறேன் எட்டுமணி நேர உழைப்பு
உன்னத மட்டில்லா மகிழ்வின் சிறப்பு
உழைப்பிற்கு எதுவும் நிகரில்லை செப்பு
உழைப்பே வாழ்வின் ஊன்றுகோல் !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

( 28.05.2020 )

பகிரவும்...