Main Menu

“ உலக கவிதைத் தினத்திற்கான சிறப்புக் கவி “

சொற்களால் கட்டப்பட்ட சாம்ராச்சியம்
சந்தங்கள் விளையாடும் சாகசகூடம்
கற்பனையும் ஒப்பனையும் கலந்த ஆரம்
அழகியலை வெளிப்படுத்தும் அலங்காரத்தேர்
இனிமையும் எளிமையும் கலக்கும் கடல்
உவமை உருவக அணிகளாலான ஊர்தி
ஓசையும் ஒய்யாரமும் கொண்ட தென்றல்
இத்தனையும் கொண்டதே அழகிய கவிதை !

உள்ளத்து உணர்வுகளை
உணர்வுகளின் தெறிப்புக்களை
கால வெள்ளத்தின் கருவூலங்களை
காட்சிப் பதிவுகளை காலச்சுவடுகளை
நினைவழியா ஞாபகங்களை
வாழ்வியல் தடங்களை ஓவியமாக்கி
எழுத்தினால் வடிக்கப்படும்
உயிர் ஓவியமே கவிதை !

அழகியலின் மொத்த வடிவமாய்
அள்ள அள்ளக் குறையாத அமுதமாய்
காலத்தின் கருவூலங்களாய்
காலக் கண்ணாடியாய்
கச்சிதமான படைப்பிலக்கியமாய்
வாழும் காலத்திற்கு ஏற்ப
படைப்புக்களாகி பரிணமித்து
அழகியலாவதே அழகிய கவிதை !

பங்குனித் திங்கள் இருபத்தியொன்றை
உலகக் கவிதை தினமாக
ஐ.நா சபையும் அறிவித்து மகிழ்கிறதே
எழிற்சி மிக்க கவிகள்
புரட்சிக்கும் சுதந்திரத்திற்கும் வித்திட்டதே!

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...