Main Menu

ஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி)

அன்னைத் தமிழின் ஆரணங்கு
அரசியல் துறைப் பொறுப்பாளினி
தாய்நாட்டை நேசித்த ஏந்திழையாள்
தாய்த்தமிழை சுவாசித்த தமிழினியாள்
தாய்நிலத்தில் விதையானாளே
இன்றைய நாளாம் ஐப்பசித்திங்கள் 18 இல் !

ஈழத்து தெருக்களை எல்லாம்
முழக்கமிட்ட குரல்
முடங்கிப் போனதுவே
பெண்ணியம் பேசிய
கண்ணியமான காரிகை
விண்ணுலகம் சென்றதுவே !

அரசியல் சாணக்கியத்தை
உரக்கக் கூறிய ஆழுமைக் குரல்
நிரந்தரமாய் ஓய்வை எடுத்ததுவே
வீரப் பேச்சும் சுட்டித்தனமும்
அமைதியை இழந்ததுவே !

விடுதலைக்கு பரணி பாடிய
வீரக் குயில் வித்தாகிப் போனதுவே
வீரமும் தீரமும் கொண்ட வீரமங்கை
மெளனித்துப் போனதுவே
பெண்ணின எழிற்சிக்குப் போராடிய தாரகை
விண்ணோடு கலந்ததுவே !

பேனா முனையால் சமர்க்களம் செய்து
களப்படையல்கள் பல படைத்து
போர்க்காலம், கூர்வாளின் நிழலில் என்ற
இலக்கியப் படையல்களை வெளியிட்ட
இலக்கிய வானின் சுடரொன்று
மின்னலாய் மறைந்ததே
கொடிய நோயின் கொடூரத்தால்
ஐப்பசித் திங்கள் பதினெட்டிலே !

ஈழத்தமிழிச்சி தமிழினி “ (இன்றைய நாளுக்கான நினைவுக்கவி)
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 18,10,2018

https://www.youtube.com/watch?v=0G0FRiJN1uU&feature=share&fbclid=IwAR0CmQt55yNHxipdsHdqaNqZ_T8jaF3oUi4cQ84LCWMlCUT2Rxf0RoGo_lo

பகிரவும்...