Main Menu

“இதுவும் ஒரு மாற்றமே”

மாற்றம் என்ற வார்த்தை மட்டும்
மாறாமல் எப்போதும் இருக்க
மாற்றுதே உலகினைப் பல மாற்றங்கள்
மாற்றம் ஒன்று வருமென
தேற்றுகிறோம் நாமும் மனதினை !

தொற்று என்ற நச்சுக்கிருமி
தேசம் கடந்து பற்றிப் படர்ந்து
கூற்றுவனாகி உயிரைக் குடித்து
காவு கொள்ளுது உயிர்களை
மாற்று வழியினைத் தேடுது உலகும்
மாற்றமே இதுவும் மாற்றமே ?

நாட்டில் வீட்டில் உலகில் மாற்றம்
கைகுலுக்கலும் கட்டித் தழுவலும்
கண் காணாமற் போச்சு
கை கூப்பி வணக்கம் சொல்லல்
காலத்தின் தேவையாச்சு
சுத்தம் பேணல் சுகாதாரம் காத்தல்
கை கழுவுதல் கட்டாயமாச்சு
இதுவும் ஒரு மாற்றமே !

குடும்ப உறவுகள் கூடியிருந்து
குலாவி மகிழ்ந்து
வீட்டிற்குள் முடக்கம்
ஒன்றாய் இருந்து உணவு உண்டு
உறவாடும் காலம் இப்போ
இதுவும் ஒரு மாற்றமே !

ஆனாலும் உலகப் பரப்பில்
வீழ்ச்சி கண்டது பொருளாதாரம்
சரிந்தது பங்குச் சந்தைகள்
வெறிச்சோடியது வீதிகள்
மூடப்பட்டன பள்ளிகள்
இணையக் கல்வியில் மாணவர்கள்
இதுவும் ஒரு மாற்றமே !

கொள்ளை நோயின் தாக்கத்தால்
பூமிப் பந்தின் வெப்பமும் குறைய
காற்றில் மாசுபடுதலும் தடுக்கப்பட
சுற்றுச் சூழலும் தூய்மையாகிட
புன்னகைத்து மகிழ்கிறது இயற்கையும்
மாற்றமே இதுவும் ஒரு மாற்றமே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 02.04.2020

பகிரவும்...