நினைவுக்கவி……கவிஞர் நா. முத்துக்குமார் !!! ரஜனி அன்ரன் (B.A)

இலக்கிய வானில் சிறகடித்த இளஞ்சிட்டு
திரையிசைக்கு கவிமாலை கோர்த்து
புகழ்மாலையாய் சூடி மகிழ்ந்த இளவல்
சாதிக்க வேண்டிய வயதினில்
சாதனை படைக்கவேண்டிய காலமதில்
சாவும் அழைத்ததே விரைவில்
காவு கொண்டதே
ஆவணித் திங்கள் 14 இலே !

இலக்கிய நயமும் இலக்கிய சிந்தனையும்
சமூகப் பார்வையும்
சமகால சிந்தனையும் கொண்டு
ஆயிரத்திற்கு மேல் படைத்தார் கவிகள்
சாகாவரம் பெற்ற அவரின் கவிதைகள்
பொக்கிஷமாய் திகழும் எப்போதும் !

ஆனந்த யாழை அழகாய் மீட்டி
அழகே அழகே என
ஆனந்தமும் அடைந்து
தேசீய விருதையும் பெற்று
மரணம் கூட அழகேயென
சொல்லாமல் கொள்ளாமல்
மூடினாரோ மனக் கதவையும் !

நன்றி.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !