Tuesday, August 14th, 2018

 

நடிகை ரம்பாவுக்கு கனடாவில் வளைகாப்பு!

பிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரம்பா தனது கணவருடன் கருத்து வேறுபாட்டுடன் உள்ளதாவும் விரைவில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்படவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது. இந்த நிலையில் வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ரம்பாவின் மூன்றாவது வளைகாப்பு நிகழ்ச்சி கனடாவில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வளைகாப்பு விழாவில் நடன இயக்குனர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ரம்பாவின் வளைகாப்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


பார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நினைவஞ்சலி நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய பார்சிலோனாவின் லா ரம்ப்லா வீதியில் பாதசாரிகள் மீது வானை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதோடு, 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேதினம், கட்டலோனியாவிலுள்ள கடலோரப் பகுதியில் காரைக் கொண்டு நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். இவ்வாறு பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின. தாக்குதல் மேற்கொண்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் மேலும் அத்தீவிரவாதிகளில் இருவர் இன்னும் அந்நாட்டுச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இத்தாலியில் 1100M பாலம் இடிந்து வீழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் பாதிப்பு!

இத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அவசர பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் பகுதியில், விமான நிலையத்திற்கு அருகே, ஆயிரத்து 100 மீட்டர் நீளமுடைய குறித்த பாலத்தின் 100 மீட்டர் பகுதியே இன்று (செவ்வாய்க்கிழமை) உடைந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பதிப்படைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் மற்றும் அம்பியூலன்ஸ் விரைந்துள்ளதாகவும், அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என்றும், மீட்பு பணிகளின் பின்னரே உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிவிக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1100 மீட்டர் நீளமுடைய குறித்த பாலமானது 1962 இல் ஆரம்பிக்கப்பட்டு அதன் நிர்மாணப்பணிகள்மேலும் படிக்க…


சுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு

சுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரொக்ஹோம், மால்மோ, கோட்டன்பேர்க் மற்றும் உப்சாலா ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை காலைவேளையிலும் இளைஞர் கும்பல்களால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாசகாரத் தாக்குதல்கள் சமூக ஊடகங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கோட்டன்பேர்க் பொலிஸார் இந்த தாக்குதல்கள் குறித்து தெரிவிக்கையில்; தாக்குதல்களை நடத்தியவர்களை தாம் அடையாளம் கண்டுகொண்டு அவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் குறித்து ஸ்வீடிஷ் பிரதமர் ஸ்டீபன் லோஃபென் வானொலி நேர்காணலில் ஒன்றில் கூறுகையில்; இந்த விடயம் குறித்து தான் மிகவும் கோபமாக உள்ளதாக கூறியதுடன் ஏன் இவர்கள் மக்களுக்கு இந்த தீங்கினை இழைக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


ஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்!

ஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதிலோ, வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதிலோ ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மாறாக, பதவியில் இருக்கும் வரை எந்த அளவுக்கு கொள்ளையடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு கொள்ளை அடிக்க வேண்டும் என்பதில் தான் ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர். ஊழலை ஒழிப்பதற்காக ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று பா.ம.க. போராடி வந்த நிலையில், உச்ச நீதிமன்றமும் நெருக்கடி கொடுத்ததால் தமிழகத்தில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை தமிழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. ஆனால், அந்தச் சட்டத்தில் ஊழல்வாதிகளை தண்டிக்கப் பயனுள்ளமேலும் படிக்க…


ஜப்பான் மன்னிப்புக் கோர வேண்டும்! – தாய்வான் ஆர்ப்பாட்டக் காரர்கள்

ஜப்பானை மன்னிப்புக் கேட்கக் கோரி, தாய்வானிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்னால் 50இற்கும் மேற்பட்ட பெண் சமூக சேவையாளர்கள் வெள்ளை நிற முகமூடிகளையும் கறுப்பு மேலாடைகளையும் அணிந்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் உலகமகா போர்க் காலத்தில் தாய்வான் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்பட்டதையிட்டு ஜப்பான் அரசாங்கத்திடம் முறையான மன்னிப்பையும் இழப்பீட்டையும் வழங்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தாய்வானிலுள்ள ஜப்பானிய தூதரகத்திற்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் போராடி வருகின்றனர். 2ஆம் உலகப் போர் காலத்திலும் அதற்கு முற்பட்ட அரசாட்சிக் காலத்திலும் ஜப்பானிய இராணுவத்தின் பாலியல் தேவைகளுக்கு, தாய்வான் பெண்களையும் சிறுமிகளையும் பலவந்தப்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்காலத்தில் ஜப்பானின் பாரம்பரியமாக இவ்விடயம் இருந்துள்ளதென்றும் கூறப்படுகிறது. குறித்த வன்புணர்வுச் சித்திரவதைகளுக்கு உட்பட்ட தாய்வான் பெண்களும் சிறுமிகளும் தற்போது உயிரோடில்லாத போதிலும், தாய்வான் பெண்களை வன்புணர்வுமேலும் படிக்க…


தி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்

தி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “இந்த கூட்டமானது தி.மு.க.வின் உயர் நிலை கூட்டம் சார்பில் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன்தான் நடைபெற்றது. தலைவர் கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த முன்னோடிகள் தலைவருடனான தங்கள் நினைவுகளை பகிந்துக்கொண்டார்கள். மேலும் தலைவரை தேர்வு செய்வது பொதுக்குழுவே, ஆகவே பொதுக்குழுதான் கூடி முடிவு செய்யும். விரைவில் அதற்கான காலம் வரும்” எனவும் அவர் கூறினார்.


முல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பான வகையில் நடந்து கொண்டனரா?

முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று(செவ்வாய்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர்களை விடுவிக்கும் வகையில் ஆரம்பத்தில் பொலிஸார் செயற்பட்டதாகவும், எனினும் மக்களின் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் இவ்வாறு பக்சசார்பான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. நேற்றிரவு (திங்கட்கிழமை) 10 மணியளவில் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன. கடும் பிரயத்தனத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், 3 படகுமேலும் படிக்க…


முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கரிசனை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வடக்கிற்கான விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களது 8 வாடிகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) தீவைக்கப்பட்ட நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் மனோ கணேசனினால், அமைச்சரவையின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி இந்த உறுமொழியை வழங்கியதாக அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வட பிராந்திய பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


செஞ்சோலை படுகொலை – ஆண்டுகள் 12

மூன்று தசாப்த கால யுத்தம் ஏற்படுத்திச் சென்ற கோரச் சம்பவங்கள் ஏராளம். அவற்றில் மனதை கசக்கிப் பிழியும் பல சம்பவங்கள் காலத்தால் அழியாத கறைபடிந்த வரலாற்றுத் தடங்களாக – என்றும் மாறாத வடுக்களாக எம் மனதில் நிழலாடுகின்றன. மனிதனாய் பிறந்த அனைவரது மனதையும் ஒருகணம் உலுக்கிய கோரச் சம்பவம் செஞ்சோலை படுகொலை. சின்னஞ்சிறு தளிர்கள் துளிர்விட்டு வரும்போதே அவற்றை சருகாக்கிய கோரச் சம்பவம் இடம்பெற்று ஆண்டுகள் 12. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், அப்பாவி சிறுமிகள் 61 பேர் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர். யுத்தத்தால் தமது உறவுகளை இழந்து பரிதவித்து நின்ற அந்த சிறுமிகள் வேரோடு கருவறுக்கப்பட்ட நாள், இலங்கை வரலாற்றில்மேலும் படிக்க…


செஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்!

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் சிறிலங்காவின் வான் படையினர் கடந்த 2006 ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டிருந்தனர். பாடசாலை மாணவிகளின் தலைமைத்துவ பயிற்சி நடைபெற்ற செஞ்சோலையில் வான்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ் பல்கலைக்கழகம் உட்பட தாயகத்தின் பல இடங்களிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


நினைவுக்கவி……கவிஞர் நா. முத்துக்குமார் !!! ரஜனி அன்ரன் (B.A)

இலக்கிய வானில் சிறகடித்த இளஞ்சிட்டு திரையிசைக்கு கவிமாலை கோர்த்து புகழ்மாலையாய் சூடி மகிழ்ந்த இளவல் சாதிக்க வேண்டிய வயதினில் சாதனை படைக்கவேண்டிய காலமதில் சாவும் அழைத்ததே விரைவில் காவு கொண்டதே ஆவணித் திங்கள் 14 இலே ! இலக்கிய நயமும் இலக்கிய சிந்தனையும் சமூகப் பார்வையும் சமகால சிந்தனையும் கொண்டு ஆயிரத்திற்கு மேல் படைத்தார் கவிகள் சாகாவரம் பெற்ற அவரின் கவிதைகள் பொக்கிஷமாய் திகழும் எப்போதும் ! ஆனந்த யாழை அழகாய் மீட்டி அழகே அழகே என ஆனந்தமும் அடைந்து தேசீய விருதையும் பெற்று மரணம் கூட அழகேயென சொல்லாமல் கொள்ளாமல் மூடினாரோ மனக் கதவையும் ! நன்றி.


உயர் தரப்பரீட்சையில் தோற்றிய மாணவனிடம் கையடக்க தொலைபேசி 

கைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசிய முன்னணிக்கு புதிய சின்னம்?

ஐக்கிய தேசிய முன்னணியை புதிய கூட்டணி கட்சியாக பதிவு செய்வதுடன், புதிய சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆராய்வுக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


கென்யாவில் சுற்றுலா பயணியை கடித்து கொன்ற நீர்யானை

கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் தைவான் சுற்றுலா பயணியை நீர்யானை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைக்கு இடையில் அமைந்துள்ளது. தைவானை சேர்ந்த சுற்றுலா பயணி சங் மிங் சாங் (66) என்பவர் அங்கு சென்று இருந்தார். வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார். பின்னர் மலையின் உயரமான இடத்தில் இருந்து நீர் யானைகளை போட்டோ எடுத்தார். அப்போது கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்துக்குள் விழுந்து விட்டார். இதனால் ஆவேசம் அடைந்த நீர்யானை அவரை கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். இருந்தும் மார்பில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த ஆண்டு மட்டும்மேலும் படிக்க…


ஊழல் வழக்கு விசாரணை – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜர்

அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி லண்டன் அவன்பீல்டு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதில் அவன்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில்மேலும் படிக்க…


நாளை சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் நாளை 72-வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “ சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுகிறார். முதலில் இந்தியிலும், அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு இரவு 8 மணியளவில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ட்ரம்புக்கு எதிராக செயற்பட்ட FBI உளவாளி பணி இடைநீக்கம்!

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான எப்.பி.ஐ.யின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த எப்.பி.ஐ. உளவாளியான பீட்டர் ஸ்ட்ரோக், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான குறுந்தகவல்களை தனது நண்பருடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் 60 நாட்களுக்கு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்புக்கு எதிராக பீட்டர் ஸ்ட்ரோக் செயற்பட்டதாகவும் அவரது தேர்தல் வெற்றியை தடுக்க முயன்றதாகவும் குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வெற்றிபெறச் செய்வதற்காக ரஷ்யா செயற்பட்டதாக ஏற்கனவெ குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப் பற்றிய குறுந்தகவல் பறிமாற்றத்தின் போது, அவ்வாறான விடயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் எப்.பி.ஐ. உளவாளி பீட்டர் ஸ்டாக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எப்.பி.ஐ. பிரதி பணிப்பாளர் டேவிட் போவ்டிச் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவிட்டதாக ஸ்ட்ரோக்கின் சட்டத்தரணிமேலும் படிக்க…


இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாளை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவின் 72ஆவது சுதத்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதன்பொருட்டு எல்லைப் புறங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர், இராமேஸ்வரம் எல்லைப் பகுதிகளில் கடும் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இந்தியா 72வது சுதந்திர தினவிழாவை கொண்டாடடுவதனை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலையடுத்து எல்லைப்புறங்கள் மற்றும் தலை நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் முழு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னே அனுமதிகின்றனர். அதேபோல் இராமேஸ்வரம் தீவுப்பகுதியும் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை முதல் பொலிஸார் ஆயுதம் ஏந்தி தீவிர ரோந்துப் பணியில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன் ரயில் பாலம், பேருந்துநிலையம், மற்றும் பொது மக்கள்மேலும் படிக்க…


தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் இன்று!

தி.மு.க. செயற்குழு கூட்டத்தை, கலைஞர் அரங்கில் இன்று (செவ்வாய்கிழமை) நடத்துவதற்கான அழைப்பினை, கட்சியின் பொதுச் செயலாளார் அன்பழகன் அழைப்பு விடுத்திருந்தார். கலைஞர் கருணாநிதி காலமானதையடுத்து, தி.மு.க தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது. தி.மு.கவின் அடுத்த புதிய தலைவராக அக்கட்சியின் செயல்தலைவர்  மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தி.மு.க செயற்குழு கூடுகிறது. முன்னதாக இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில்  பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும்,  மு.க.ஸ்டாலின் பொதுச் செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதைத் தொடர்ந்து, அன்பழகன், அவசரமாகக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது, கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.


மாகாண சபையின் சிக்கலை தீர்க்க அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: வட மாகாண ஆளுநர்

அமைச்சர்களின் மாற்றத்தினால் வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார். யாழ். குருநகர் பகுதியிலுள்ள உயர் தொழில்நுட்ப நிறுவகத்துக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த ஆளுநர், அங்கு ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த ஆளுநர், ”ஏற்கனவே முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட டெனீஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவிற்கமைய மீண்டும் அமைச்சராக கருதப்படுகிறார். மாகாண சபைகளுக்கு 5 அமைச்சர்களே இருக்க முடியும் என்ற சூழ்நிலையில் தற்போது ஆறு அமைச்சர்கள் உள்ளமை பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. ஒரு ஆளுநராக அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரமில்லை. எனவே, வட மாகாண முதலைச்சர் இது தொடர்பாக தாமதிக்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


சீரற்ற கால நிலையினால் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்

மலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவைகயில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா எட்லி தோட்டத்தில் 37 குடும்பங்களை சேர்ந்த 167 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக எட்லி தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் கீழ்பிரிவு தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மண்சரிவு காரணமாக அத்தோட்டத்தின் 13 ஆம் இலக்க தொடர் குடியிருப்பில் வாழும் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் இடம்பெயர்ந்து எபஸ்போட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடைக்கிடையே பெய்து வரும் கனமழை காரணமாக அம்பகமுவ,மேலும் படிக்க…


வாள்வெட்டுக் குழுவினரால் அடித்து நொருக்கப்பட்ட தனியார் பேரூந்து

அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பேரூந்து ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.


வடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலை தூக்குவதற்கு, அனுமதிக்க மாட்டார்கள்

தெற்கில் தேவையற்ற பயபீதி நிலவுகின்றது. ஆனால் வடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு, ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிற்கு எவை சிறந்த விடயங்கள் என கதைப்பதற்கு ரணில்விக்கிரமசிங்கவிற்கும் பசிலுக்கும் அருகதையில்லை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த 70 வருடங்களாக இரு பிரதான கட்சிகளும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எவையும் தங்களிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தனக்கு 32 வருடங்கள் தேவை என ரணில்விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்,அவரிற்கு தற்போது 70 வயதாகிவிட்டதால் அவர் அது வரை உயிருடன் இருப்பாரா என்பதே சந்தேகம் எனவும், பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மீண்டுமொருமுறை அதிகாரத்தை கோருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !