கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுக்கவி – 02/06/2021
வைகை நதிக்கரையில் உதித்த கவி வைரம்
வாணியம்பாடியில் பணியாற்றிய பேராசான்
வானம்பாடியாய் கவி படைத்த கவிக்குயில்
தமிழிலக்கிய வரலாற்றுக் கவிப்பரப்பின் நாயகன்
கவிப்பரப்பில் முத்திரை பதித்த பெருங்கவிஞன்
விண்ணுலகு ஏகினாரே ஆனித்திங்கள் இரண்டிலே !
கவிப் பரம்பரையில் உதித்த பெருங்கவிஞன்
கவிஞர்களை உருவாக்கிய கவி ஆசான்
பாட்டனும் தந்தையும் உருதுக் கவியில் கவிசமைக்க
தமிழ்க் கவிப்பரப்பில் முத்திரை பதித்தாரே வித்தகனாய்
புதுக் கவிதையிலும் புலமை பெற்று
முனைவர் பட்டத்தையும் முத்தாகப் பெற்று
ஆலாபனைக் கவிப்படையலுக்கு சாகித்திய விருதும் பெற்று
கவியரங்குகள் மகாநாடுகள் பலவும் நடாத்தினாரே !
தமிழ் கவிப்பரப்பின் வழிகாட்டி
தமிழ்க் கவிதை வரலாற்றின் முன்னோடி
கைக்கூ கவிதையிலும் ஆழுமை கொண்டார்
சிலேடை மொழிநடையில் செப்புவதும் இவரின் தனிப்பாணி
தமிழ் இலக்கிய கவி வானம்பாடி வானுலகம் சென்றதுவே
வானம்பாடியாய் வானுலகில் வட்டமிட !
கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)