Main Menu

உலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)

அகில உலகிலும் அமைதி வேண்டி
சகல வகையிலும் ஆதரவு கொடுத்து
கலகங்களை நிறுத்தக் கோரி
உலக அமைதி தினமாக
உருவாக்கித் தந்ததே ஐ.நாவும்
திங்களாம் புரட்டாதி இருபத்தியொன்றை !

சமாதானமும் அகிம்சையும்
சர்வ தேசமெங்கும் மலரவும்
தீவிரவாதமும் போர்களும்
தூர விலகிப் போகவும்
தீர்மானங்கள் எல்லாம் நிறைவேறவும்
ஆக்கித் தந்ததே ஐ.நாவும்
அகில உலக அமைதி நாளை !

வன்முறைகளாலும் வக்கிரங்களாலும்
பன்முகப் பட்டுக் கிடக்கிறது உலகு
ஒவ்வொரு தனி மனிதரும்
ஒத்துளைப்பு நல்கினால்
ஒற்றுமை மேலோங்கி
உலகில் நிலைக்குமே அமைதியும் !

வெள்ளைப் பூக்கள் மலரட்டும்
வெள்ளைப் புறாக்களும் பறக்கட்டும்
உள்ளம் எல்லாம் மகிழட்டும்
உலகும் அமைதி பெறட்டும்
உறுதியோடு ஏற்றிடுவோம் அமைதியை
அகிலம் எங்கும் அழகோடு
அமைதிப்பூங்காவும் பூத்துக் குலுங்கட்டும் !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...
0Shares