Main Menu

அகவை 65 வாழ்த்துகள்

வரலாற்றுக் காவலனை
வல்வை மைந்தனை
எல்லை இல்லாத் தலைமகனை
ஏற்றம் கொண்ட பெருமகனை
சந்தக் கவியோடு
தெம்மாங்கு இசையோடு
பண்பாடி வாழ்த்திடுவோம்
பரணி பாடிடுவோம் !

அகவை அறுபத்தி ஐந்தினிலும்
ஆழுமைத் தோற்றத்தோடும்
ஆற்றலின் வலிமையோடும்
அறம் காக்கும் மறவனை
அகம் குளிர வாழ்த்திடுவோம் !

எட்டுத் திக்கும் புகழ் பரப்ப
பட்டொளியாய் வந்தவனை
பார் போற்றும் பகலவனை
தாயகத்தின் மைந்தனை
தாய் நிலத்து வேந்தனை
வாழ்த்திப் போற்றிடுவோம்
வாழ்க பல்லாண்டு வளமோடு !

கவி……ரஜனி அன்ரன்