Main Menu

7 ஆம் ஆண்டு நினைவு நாள்- மூத்த புலி ஒன்று மூச்சடங்கிய நாள்

சொர்ணமாம் தேசியத்தலைவரின் சொர்க்க தங்கமாம் !
தமிழீழத்தின் மூத்த புலி ஒன்று மூச்சடங்கிய நாள் !
கோணமலையில் உதித்த சூரியன் ஒளியிழந்த நாள் !
உன் குரலின் தொணி இழந்து எங்கள் செவிகளுக்கு ஒலி இழக்க செய்த நாளும் இதுவே !

சொர்ணம் எனும் பேரை கேட்டாலே சிங்கள படையை சிதறி ஓட வைத்து சாதனை படைத்தவனே,துணிவு உன் காலடியில் துவண்டுகிடந்தது.

அச்சத்திற்கே உன்னை ஆக்கிரமிப்பு செய்ய அச்சமாம்,அதனால் உன்னிடம் அச்சமில்லை,உச்சம் தான் இருந்தது.

உன் செயலில் நேரிய பார்வை இருந்தது உயிர்ப்பிருந்தது,அதனால் உன் கடமையில் துடிப்பிருந்தது.

விடுதலை எனும் இலட்சியப் பசி உனக்குள்ளே தீயாய் எரிந்ததால், மரணம் உன் காலடியை மண்டியிட்டு தோற்று போனது பல களங்களில்…

நந்திக்கடலும் பொங்கி நுரை தள்ள மறந்து போனது,விசாக காற்று கூட வீச மறுத்து தமிழீழம் எங்கும் புளுக்கமாய் கிடந்தது,உய்யும் வழி எமக்குரைத்த சூரிய பகவான் கூட மேற்கில் மறைந்தவனாகவே தென்பட்டான்…

வீர தளபதியே நீ உள்ளத்தால் உணர்வால் சொல்லெண்ணா வலிகளை நெஞ்சுக்குள் புதைத்து இதே நாள் மூச்சடங்கி மெளனமாகி போனாய் ஆனால் இன்றும் நாம் கத்தியழும் குரலோசை உன் காதுகளுக்கு கேக்க வில்லையா?

உன் உருவம் பார்த்து உருக்குலைந்து போன சிங்களம் இன்று உன் வீர தடங்களின் மேல் ஒய்யாரமாய் உலா வருகிறான் அதை நீ அறியாயோ அண்ணா?

புலிகள் தேரோட்டிய வீதிகள் எங்கும் புளுனிகளும் கருக்குருவிகளும் ஒற்றை சிறகடித்து சொத்தி பறைவைகளாக…

நீ கொண்ட இலச்சியம் தன்னம்பிக்கை தோற்காது
அழகாய் பூத்திடும் எம் தமிழீழத்தில் முதல் மொட்டாய் நீ மலர்வாய்.
ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து செல்கிறோம்..
தமிழீழத்தின் மூத்த வித்துக்கு கண்ணீர் மல்க வீர வணக்கங்கள் !

15.05.2016

பகிரவும்...