Main Menu

35வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – குணம் &ராஜி (01/06/2026)

தாயகத்தில் சாவகச்சேரி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களைப் பிறப்பிடமாக கொண்ட , தற்போது கனடாவின் மொன்றியல் நகரில் வசித்து வரும் குணம் – ராஜி தம்பதிகள், இன்று 01/06/2026 ஜூன் மாதம், திங்கட்கிழமை தங்களது 35வது ஆண்டு திருமண நாளை குடும்பத்தினருடன் அமைதியான முறையில் கொண்டாடுகின்றனர்.

இன்று தங்களது 35வது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் குணம் – ராஜி தம்பதிகளை, அன்புப் பிள்ளைகளான டினேஷ், டிலக்சன், டிலீசன், அபர்ணா, டிலான், விசாகன் ஆகியோரும், மைத்துனர்மார், மச்சாள்மார், அண்ணன்மார், அக்காமார், தம்பிமார், தங்கைமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.

இத்தம்பதிகள் இறைவனின் அருளால் நல்ல தேக ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், எல்லா வளங்களும் பெற்று, பல்லாண்டுகள் இன்பமும் நலனும் நிறைந்த வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்தித்து அனைத்து உறவுகளும் வாழ்த்துகின்றனர்.

இன்று தங்களது 35வது திருமண நாளைக் கொண்டாடும் குணம் – ராஜி தம்பதிகளை, TRT தமிழ் ஒலியில் பணியாற்றும் அனைத்து உறவுகளும் மனமார வாழ்த்தி மகிழ்கின்றோம்.

மேலும், இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலி அலைவரிசையில் ஒலிபரப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அன்புப் பிள்ளைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இனிய 35வது திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! குணம் – ராஜி தம்பதிகள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறோம்!