Main Menu

15.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ் அளவை பெற ஜேர்மனி தீர்மானம்!

மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 15.5 மில்லியன் டோஸ் அளவை பெற ஜேர்மனி எதிர்பார்க்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மொடர்னா தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் கீழ் நாங்கள் 15.5 மில்லியன் டோஸைப் பெறுவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசிக்கான நிபந்தனை சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் வழங்கிய ஒரு வாரத்திற்குள் ஜேர்மனி வார இறுதியில் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியது.

கிழக்கு மாகாணமான சாக்ஸானி அன்ஹால்டியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டிக்குக் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஸ்ட்ராஜெனெகா, சனோஃபி மற்றும் ஜி.எஸ்.கே, ஜான்சன் மற்றும் ஜான்சன், க்யூர்வாக், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக், மொடர்னா ஆகிய மருந்து நிறுவனங்களுடன் 2 பில்லியன் அளவிலான தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

பகிரவும்...