Main Menu

ஜேர்மனியில் கத்திக் குத்து: மூன்று பேர் உயிரிழப்பு- ஐந்து பேர் படுகாயம்!

தெற்கு ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்ததோடு ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிராங்பேர்ட்டின் தென்கிழக்கே உள்ள வூஸ்பேர்க் நகரின் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்குதல்தாரியை சுட்டுப் பிடித்தனர். இதன்போது தாக்குதல்தாரிக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

வீர்ஸ்பெர்க்கின் மத்திய பார்பரோசாப்ளாட்ஸைச் சுற்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை, நேரில் கண்டவர்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் காணொளிகளை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.

குறித்த தாக்குதல்தாரி, 24 வயதான சோமாலியாவில் இருந்து குடியேறியவர் எனவும் அவர் மனநல சிகிச்சைகளை மேற்கொண்டு வந்திருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பொலிஸ் தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தவிர மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பகிரவும்...