Main Menu

ஜேர்மனியில் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்

ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி பாதுகாப்பானது என கூறியுள்ளன.

ஆனால் இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக இந்த தடுப்பூசி பயன்பாட்டை பல நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...