Main Menu

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஜேர்மனி ஆதரவு!

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், புதிய பொருளதார தடைகளை விதிக்க முழு ஆதரவினை வழங்குவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹைக்கோ மாஸ் கூறுகையில், ‘கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்துள்ளது அந்த நாடு மனித உரிமைகளை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அமுல்படுத்துவதற்கு மட்டுமின்றி, தடைவிதிப்புக்கு உள்ளாகும் தனிநபர்களின் பட்டியலையும் தயாரிப்பதற்கு ஜேர்மனி ஆதரவாகவே உள்ளது’ என கூறினார்.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள பிரெஸ்ஸெல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை எடுக்கும்பட்சத்தில் ரஷ்யாவுடனான அந்த நாடுகளின் உறவு எதிர்காலத்தில் சிக்கலுக்கு உள்ளாகும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ரஷ்யா மோதல் போக்கை கையாண்டு வருவது வெளிப்படையாகவே தெரிகிறது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

பகிரவும்...