Main Menu

ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக் கூடாது: அதிபர் அறிவுறுத்தல்!

ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஜேர்மனி வாழ் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆகியன ஜேர்மனியின் பல நகரங்களில் இந்த வார இறுதியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தலைநகர் பெர்லினில் நடைபெற்ற போராட்டத்தின்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக 60பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெலின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஜேர்மனியில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அமைதியாக கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தலாம்.

ஆனால், வன்முறையில் ஈடுபடுவது, பிற மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவது, மாற்று மதத்தினருக்கு எதிராக விரோத மனப்பான்மையைத் தூண்டுவது, ஒரு குறிப்பிட்ட இனத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்ட முயற்சிப்பது போன்றவற்றில் யாரும் ஈடுபடக் கூடாது.

யூதர்களுக்கு எதிராக வன்மம் கொண்டு வீதிகளில் இறங்கி போராடுபவர்கள் நாட்டின் அடிப்படைச் சட்டத்துக்கு எதிராக செயற்படுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என கூறினார்.

பகிரவும்...