Main Menu

“மக்கள் பாவலன் இன்குலாப் “ (நினைவுக்கவி)

மக்கள் கவிஞன் புரட்சியின் நாயகன்
மனிதத்தைப் பாடிய மக்களின் பாவலன்
இந்திய மண்ணில் பிறந்த போதும்
இன மத பேதம் கடந்த மாமனிதன்
படைப்பாளி, சிந்தனைவாதி, கவிஞன், பேராசான் என
பன்முக ஆளுமையாளன், பரந்த சிந்தனையாளன் !

அடங்காத் தமிழ்ப்பற்றும் விடுதலைப் பற்றும்
இவர் சுவாசிக்கும் மூச்சுக் காற்று
ஒடுக்கப்பட்ட இனத்திற்காய் முழங்கிய கவிஞன்
ஈழ விடியலோடு இரண்டறக் கலந்த மகான்
தேசியத்தையும் பெண் சுதந்திரத்தையும் காத்த தீரன்
தேசியத் தலைவனையும் சந்தித்த பெருமகன் !

பிறப்பால் ஓர் இஸ்லாமியத் தமிழன்
மத அடையாளங்களைத் துறந்த பகுத்தறிவாளன்
மனிதத்தை நேசித்த மானிடன்
மனிதம் என்றொரு பாடல் இசைத்த மகான்
ஏழு கடல்களும் பாடட்டும்
எட்டாத வானமும் கேட்கட்டும்
இவரின் கானம் விடியலுக்கு சேர்த்தது வலுவினை
இறுதி வரையும் விடியலை நேசித்த மகான்
இவ்வுலகை விட்டு நீங்கினாரே
மார்கழித் திங்கள் ஒன்றிலே !

ரஜனி அன்ரன் (B.A) 01.12.2018

 

பகிரவும்...