Main Menu

“ புத்தாண்டு 2020 “

பெருமை கொண்ட ஆண்டு
உரிமையோடு விடை பெற
உலகமே கொண்டாடி மகிழ
வான வீதியெங்கும் வண்ண ஒளி வீசிட
மத்தாப்பு வாண வேடிக்கையோடு
முத்தாப்பாய் முகிழ்த்து
புன்னகைப் பூக்களும் மலர்ந்து
பூத்தது புதுமை ஆண்டு !

புத்தெழிலோடு புத்துணர்வோடு
புன்னகை சிந்தி இன்னல்கள் போக்கி
வல்லமை தந்து வளங்கள் நிறைந்து
மனங்கள் மகிழ்ந்து இனங்கள் வாழ
பூத்தது புதிய புத்தாண்டு !

நம்பிக்கை மலர்ந்து நல்லிணக்கம் சிறந்து
நன்மைகள் பெருகி நட்பு வலுப்பெற
நாடும் வீடும் செழிக்க
நாடி வந்ததே புதுமை ஆண்டு
நன்றியோடு வரவேற்போம் !

சந்தோசங்கள் மலர்ந்து சமத்துவம் மிளிர்ந்து
சஞ்சலங்கள் விலகி சங்கடங்கள் போக்க
சாரலாய் பூத்தது புத்தாண்டு
சோலை வனமாக்கிடுவோம்
சொந்தங்களை நேசிப்போம்
வருக வருக புத்தாண்டே
தருக தருக புதுமைகளை !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 01,01,2020

பகிரவும்...