Main Menu

தாக்கும் வைரஸ்சே !

உலகமே மரண பீதி கொள்ள
சீனாவைத் தாக்கிய வைரஸ்
உலக நாடுகளையும் தாக்கி
கொள்ளை நோயாக மாறி
அப்பாவிகளைப் பலி எடுக்கிறதே !

உலகையே மிரட்டும் வைரஸ்சே
உன் நோக்கம் தான் என்ன ?
நூற்றாண்டிற்கு ஒருமுறையாக
கூற்றுவனாய் வந்து தாக்கிறாய்
தேற்றுவாரின்றி தவிக்கிறார் மக்கள்
மாற்று வழியினைத் தேடி
மாய்கிறதே மருத்துவ உலகமும் !

எழுநூற்றி இருபதில் பிளேக்கும்
எண்ணூற்றி இருபதில் கொலராவும்
தொளாயிரத்தி இருபதில் இன்ஃபுளூவும்
இரண்டாயிரத்தி இருபதில் கொரோனாவுமென
நூறு ஆண்டுகள் இடைவெளியில்
ஊறு செய்து உயிர்களைப் பலியெடுக்கிறதே !

ஏக்கத்தோடும் பயத்தோடும்
வைரஸ்சின் தாக்கத்தோடும்
வீட்டிற்குள் முடங்கியபடி
நோயோடு முனகியபடி
கேள்விக் குறியாகிறது மக்களின் வாழ்வு !

சாலையோரங்கள் எல்லாம் சடலங்கள்
செல்லமாய் வளர்த்த செல்லப் பிராணிகளும்
தெருவிலே தேடுவாரற்று உயிரற்ற நிலையில்
வைரஸைக் கண்டு அஞ்சுது உலகம்
அண்டை நாடுகளும் கொள்ளுது பீதி
பண்டை மாற்றா இது ?

சண்டை வேண்டாம் விலகிப் போ
மண்டையைப் போட்டு
உடைக்குது மருத்துவ உலகம்
மண்டலத்தை விட்டே போய்விடு
மக்களை வாழவிடு வைரஸ்ஸே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...