Main Menu

தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக்கவியாக……ரஜனி அன்ரன் (B.A) 17/09/2018

” பகுத்தறிவுத் தந்தை ”

புரட்டாதித் திங்கள் பதினேழில்
ஈரோட்டில் பிறந்தாரே ஈ..வே..ரா..பெரியார்
வெண்தாடி கறுப்பாடை கண்ணாடி
வெளிச்சமாய் காட்டுமே இவரின் அடையாளம்
பகுத்தறிவின் தந்தை
சுயமரியாதை இயக்கத்தின் பிதா
திராவிடத்தின் தோற்றுவாய் !

தமிழர்களின் தன்மான உணர்வை
தட்டி எழுப்பிய சிந்தனைச் சிற்பி
மூடக் கொள்கைகளை
அறவே வெறுத்த முன்னோடி
மறுமணம் புரட்சித் திருமணங்களை
நடாத்தி வைத்த புரட்சியாளன்
கலப்பு திருமணத்தை ஆதரித்த ஞானி !

தேவதாசி முறையை ஒழித்து
குழந்தைத் திருமணத்தை எதிர்த்து
சாதிப் பேயை விரட்டி
பெண்ணிய சிந்தனைகளை வலுவாக்கி
பெண்ணுரிமைக்காகவே வாதாடிய பெருமகன் !

மதம் சாஸ்திரம் சம்பிரதாயங்களை
மானசீகமாகவே எதிர்த்து
பிரச்சாரங்களைச் செய்த
மாபெரும் சிந்தனையாளன்
அழியாத வரலாற்று அறிஞன் !

முடியாத நிலையினிலும்
தடியூன்றி மக்களுக்காய்
தன்மான உணர்வோடு
மடியும் வரை உழைத்தாரே
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
அவர் செயலை உணர்வை
போற்றுவோம் என்றும் !

பகிரவும்...