Main Menu

ஜேர்மனியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக் கொலை!

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஜெல்சென்கிர்சென் நகரில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவரை, பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஜெல்சென்கிர்சென் நகரில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

பொலிஸாரின் வாகனத்தை இடைநிறுத்திய குறித்த நபர், வாகனத்தில் இருந்து இறங்கிய அதிகாரிகளை கையில் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார்.

எனினும், எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அந்த நபருக்கு பொலிஸார் அறிவுறுத்திய போதும், அதனை செவிமடுக்காது அதிகாரிகளை தாக்குவதற்கு முயன்றதால், பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.

உயிரிழந்தவர் 37 வயதுடைய துருக்கியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து, யூதர்கள் மற்றும் அமெரிக்கர்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பெர்லினின் கிறிஸ்மஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...