Main Menu

திபெத் பகுதியில் நவீன ஆயுதங்களை சோதிக்கும் சீன இராணுவம்!

சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் சீன இராணுவம் முன்னெடுத்துவரும் பயிற்சியின்போது, நவீன ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீன இராணுவத்தின் திபெத் படைப் பிரிவானது, புத்தாண்டு பயிற்சியைத் தொடங்கியது.

இதில், ஹெலிகொப்டர்கள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திபெத் பீடபூமியில் செயற்படக் கூடிய வகையிலான நவீன பீரங்கிகளும் பயிற்சியின்போது சோதித்துப் பார்க்கப்படுகின்றன.

அந்த பீரங்கிகளில் நவீன, திறன் அதிகம் கொண்ட என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. சீன எல்லைப் பகுதியைக் காக்கும் பணியில் இந்த நவீன ஆயுதங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். சீன ராணுவத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்கு இந்த ஆயுதங்கள் உதவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...