Main Menu

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 3ஆகும்.

கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், மொத்தமாக 1 இலட்சத்து 93 ஆயிரத்து 254பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து 1 இலட்சத்து 76 ஆயிரத்து 300பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 ஆயிரத்து 951பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதில் 331பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு, 476பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 17பேர் உயிரிழந்துள்ளனர்.

இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

டோனீஸ் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுவீதம் எண் (ஆர்) 2.76 என மதிப்பிடப்பட்டுள்ளதாக, நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...