Main Menu

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிரித்துள்ளது!

ஜேர்மனியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் அதிரித்துள்ளது.

ஜேர்மனியில் இந்த மாத தொடக்கத்தில் 0.7ஆக இருந்த தொற்று வீதம், தற்போது 1.0 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும், மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜேர்மனியின் வைரஸ் மீள்தொற்று வீதம், ‘ஆர்’ வீதம் அல்லது மதிப்பு என அழைக்கப்படுகிறது.

‘ஆர்’ வீதம் என்பது சராசரியாக, வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் மற்றொன்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த வீதத்தை 1.0 இற்க்குக் கீழே வைத்திருப்பது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஒரு நோக்கமாகும்

பகிரவும்...