Main Menu

ஜேர்மனியில் இலையுதிர் காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை

ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தற்போது வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டாவது மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் அபாயம் இருப்பதாக, ஜேர்மனியில் உள்ள பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வைரஸ் தொற்று குறைந்து வருகின்றது என்ற போதிலும், வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்பதற்கு இது தெளிவான சமிக்ஞை அல்ல.

கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டதற்காக பாராட்டப்பட்ட ஜேர்மனி, புதிய தினசரி நோய்த்தொற்றுகள் ஒரு நாளைக்கு 700 முதல் 1,600 வரை குறைந்து வருவது மிகவும் நல்ல செய்தி

இது ஒரு தொற்றுநோய். ஒரு தொற்றுநோய்களில் இந்த வைரஸ் எங்கள் மருத்துவ கவலைகள் பட்டியலில், 60 சதவீதம் முதல் 70 சதவீதம் மக்கள் தொற்றுநோயளர்களாக இருக்கும் வரை இருக்கும்

எனவே இரண்டாவது அலை இருக்கும் என்பதை நாங்கள் மிகுந்த உறுதியுடன் அறிவோம். பெரும்பான்மையான விஞ்ஞானிகள் இதை உறுதியாக நம்புகிறார்கள். மூன்றாவது அலை இருக்கும் என்றும் ஒருவர் கருதுகிறார்’ என கூறினார்.

இதனிடையே ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க ஜேர்மனி அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

தளர்த்தும் கட்டுப்பாடுகளை தீர்மானிக்கும்போது, உன்னிப்பாக கண்காணிக்கப்படும் காரணிகளில் ஒன்று தொற்று வீதம்.

இது தற்போது, ஜேர்மனியில் கொரோனா வைரஸின் இனப்பெருக்கம் வீதம் தற்போது 0.65 என மதிப்பிடப்பட்டுள்ளது என தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0.65 வீதம் என்றால், நோயால் பாதிக்கப்பட்ட 100 பேர் சராசரியாக 65 பேருக்கு மேல் பாதிக்கிறார்கள் என்பதே பொருள். அதாவது புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறையும்.

பகிரவும்...