Main Menu

காதலும் கடந்து போகுமாம்!

காதலும் கடந்து போகுமாம்..!
கடந்து விடலாம் காதலை..
ஆனால் விட்டு சென்ற நினைவுகளை..??

காதலும் கடந்து போகுமாம்..!
கனவுகளை அழித்துவிடலாம்..
கனவுகளில் மிதந்த நாட்களை..??

காதலும் கடந்து போகுமாம்..!
மறந்துவிடலாம் ஏற்பட்ட காயங்களை..
ஸ்பரிசங்கள் கொடுத்த உணர்வுகளை..??

காதலும் கடந்து போகுமாம்..!
வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களாக..
பழைய பக்கங்களை புரட்டினால்..??

காதலும் கடந்து போகுமாம்..!
மறந்துவிடலாம் உறவின் முகத்தை..
உறவு கொடுத்த தைரியத்தை..??

காதலும் கடந்து போகுமாம்..!
கசந்து போகலாம் புன்னகைகள்..
புன்னகை கொடுத்த துள்ளல்களை..??

காதலும் கடந்து போகுமாம்..!
வெறுத்துவிடலாம் அந்த பார்வைகளை..
கடைக்கண் பார்வைக்காக ஏங்கிய ஏக்கத்தை..??

காதலும் கடந்து போகுமாம்..!
தவிர்க்கலாம் பகலில் சந்திப்பதை..
இரவில் நிலவோடு போராடும் போராட்டத்தை..??

காதலும் கடந்து போகுமாம்..!
மலர்ந்த மொட்டுக்கள் வாடலாம்..
விட்டுச்சென்ற வாசனை..??

காதலும் கடந்து போகுமாம்..!
கடந்தாலும் கடக்காததே காதல்..!!

காதலை கடந்து போகமாட்டேன்..
காதலில் நடந்து போவேன்..
இனியவனின் துணையோடு…!!

பகிரவும்...