Friday, May 4th, 2018

 

விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் – பொ.ஐங்கரநேசன்

இராணுவத்தளபதி ஒருவர் தமிழ் அரசியற் கட்சிகளை வெளிப்படையாக விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் ஒரு செயலாகும் என வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சியின் ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அவ்வறிக்கையில், “அரச ஊழியரான இராணுவத்தளபதி அரசியல் பேசுவது இராணுவ ஒழுக்கவிதிகளுக்கும் முரணானது. அந்தவகையில் இராணுவத்தளபதியின் தமிழ்க் கட்சிகளின் மீதான விமர்சனம் அரசியலின் குரல்வளையை நெரிக்கும் ஓர் இராணுவ வன்முறையாகும். இராணுவ அதிகாரியான இவர் போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து ஆலயங்களைப் புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இராணுவம் பொதுமக்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் அவர்களால் யுத்தத்தால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின்மேலும் படிக்க…


ஊழல் செய்பவர்கள் எவராயினும் தண்டிக்கப்படுவர் : ஜனாதிபதி செயலாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளில் தொடர்புடையவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பதவியேற்ற இந்த நல்லாட்சி அரசு இலஞ்ச ஊழல்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அவ்வாறு அன்று வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக சம்பந்தப்பட்டவர்கள் உயரிய பொறுப்புக்களில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.


ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி

பிராந்திய ரீதியாக பாரிய அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி, ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார். ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் ஹிரோடோ இஸுமி உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இதன் போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் சக்திவள திட்டங்களுக்கான நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ஜப்பான் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி சுட்டிகக்காட்டியுள்ளார். ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக உதவிகளை வழங்குமாறும் ஜப்பான் தூதுக்குழுவிடம் ஜனாதிபதி கோரியுள்ளார். இதேநேரம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானமேலும் படிக்க…


பிரதி பலன்களை எதிர்காலத்தில் உணர முடியும் – பிரதமர்

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பிரதி பலன்களை மக்களால் எதிர்காலத்தில் உணர முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரகம, மில்லணிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சிலர் கூறிவருகின்றனர். எனினும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை உடனடியாக எவராலும் உணர்ந்து கொள்ள முடியாது. அதற்கு சிறிது காலம் செல்லும் என்பதனால் கட்சி பேதமின்றி அந்த அபிவிருத்திப் பணிகளை தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.


லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த 53 இலங்கைப் பெண்கள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாடு திரும்பினர்

லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த 53 இலங்கைப் பெண்கள் அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது. வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றுவதற்காக லெபனான் சென்றிருந்த குறித்த பெண்கள் முறையான விசா இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்பு காலத்தை பய்படுத்;தி, லெபனானுக்கான இலங்கை தூதுவர் எடுத்த முயற்சியால் இவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் அடங்கிய அல்பம் முள்ளிவாய்க்காலில் மீட்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பல படங்கள் உள்ளடக்கிய புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்ற  காலப்பகுதியில், விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போர் நடைபெற்று 9 வருடங்கள் கடந்த நிலையில் மீட்கப்பட்ட  அல்பத்தில் காணப்படும் புகைப்படங்களில்,  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பல படங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொண்டர் ஆசிரியர்கள் கிழக்கில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக  தொண்டர் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்காது 1500 பேர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து குழப்பமான சூழலை ஏற்படுத்தி உண்மையான தொண்டர் ஆசிரியர்களை  புறம் தள்ளியமையை கண்டித்தே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


ஒரே மேடையில் 1000 பேர் மட்டக்களப்பில் சாதனை

மட்டக்களப்பில் ஆயிரம் மாணவர்கள் ஒரே மேடையில் தோன்றி நடன நிகழ்வொன்றை நடத்தி சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு நடன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நிகழ்வு அரங்கேற்றப்பட்டன.


உலகில் முதல் முறையாக ஜியோ அறிமுகப்படுத்தும் சேவை

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக ஜியோ இன்டெராக்ட் எனும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சேவையை துவங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ  இன்ஃபோகாம் நேற்று (மே 3) ஜியோ இன்டெராக்ட் (JioInteract) எனும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தளத்தை துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த தளத்தில் முதற்கட்டமாக நேரலையில் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ செயலிகளில் ஏற்கனவே ஹெச்டி வீடியோ கால்கள் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், புதிய தளத்தில் இந்திய பிரபலங்களுக்கு வீடியோ கால் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் செய்ய முடியும். இவர் 102 நாட் அவுட் திரைப்படத்தை முற்றிலும் வித்தியாசமாக விளம்ரப்படுத்துவார் என ஜியோ வெளியிட்டிருக்கும்மேலும் படிக்க…


மத்துகமை ஜெயகலா கொலை சந்தேகநபர் சிறிபால கைது: இன்று நீதிமன்றில் ஆஜர் -அமைச்சர் மனோ நடவடிக்கை

களுத்துறை மாவட்ட மத்துகமை ஹோர்கன் தோட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலா என்ற தமிழ் பெண்ணின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் ஆர்.ஏ. சிறிபால என்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று மத்துகமை பொலிஸார் களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வர். இவர் மீது கொலை குற்றம் சாட்டப்படும். இந்நடவடிக்கைகளை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின்படி, மேல்மாகாண தெற்கு வலய பிரதி பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் கண்காணிப்பில் மத்துகமை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜி. ஏ. எஸ். என். சேனாரத்ன முன்னெடுகின்றார். இதுபற்றிய ஜமமு ஊடக செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, களுத்துறை மாவட்ட மத்துகமை ஹோர்கன் தோட்டத்தில் வசித்த, மரணமடைந்த 26 வயதான இரு பிள்ளைகளின் தாய் கோவிந்தராஜா ஜெயகலா, பணி முடிந்து வீடு திரும்பும் போது, தான் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்தமேலும் படிக்க…


இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்பட மாட்டாது என ஸ்வீடன் அகாடமி இன்று அறிவித்துள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய  மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது. இந்நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள கத்ரீனா புரோஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்ணால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பிற்கு முன்னர் நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்தாண்டு வழங்கப்பட இருந்த  இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்தாண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அகாடமி வெளியிட்ட செய்தியில், ‘தேர்வுக்குழு உறுப்பினர் மீதான பாலியல் புகார் காரணமாக மக்களுக்கு அகாடமி மீதானமேலும் படிக்க…


22 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி நடந்த கிராமம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் ராஜ்காட் என்ற குக்கிராமம் உள்ளது. சம்பல் ஆற்றங்கரையில் உள்ள இக்கிராமத்தில் 350 பேர் மட்டுமே வகிக்கின்றனர். இங்கு ரோடு வசதி இல்லை. மின்சாரம் கிடையாது. குடிநீர் குழாய்கள் மற்றும் மருத்துவ வசதி என மக்களின் அன்றாட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அதில் ஒருசில மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். சூரியன் மறைந்து விட்டால் கிராமம் முழுவதும் இருட்டாகி விடும். சுத்தமான குடிநீருக்கு ஆற்றை கடந்து செல்ல முடியாத, சூழ்நிலையில் கிடைக்கும் சுத்தமில்லாத தண்ணீரை குடித்து மக்கள் உயிர் வாழ்கின்றனர். இத்தகைய அடிப்படை வசதி எதுவும் இல்லாத இக்கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு கடந்த 22 ஆண்டுகளாகமேலும் படிக்க…


தமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு

சென்னை மற்றும் வேலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வந்தார். அவரை ஆளுநர் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார் ஜனாதிபதி. அங்கு சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவக்கல்லூரி நூற்றாண்டு விழா, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறுநீரகமேலும் படிக்க…


ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் க்ரேனில் பதவியேற்பு

ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் க்ரேனில் பதவியேற்றார். ஜோன் போல்டனின் முன்னாள் உதவியாளராக இருந்த இவர் நேற்று ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதராக பதவியேற்றுள்ளார். இவ்விழாவானது நேற்று (வியாழக்கிழமை)  இடம்பெற்றது, அப்போது ரிச்சர்ட் க்ரேனின் பங்காளர் மட் லாஸ் சத்தியம் செய்யும் பைபிளினைக் கொண்டுவர அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான மில்கி பென்ஸ் க்ரேனுக்கு பதிவிப்பிரமானம் செய்துவைத்தார். இவ்விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி பேசியபோது, “கிரேன் தன்னுடைய அனுபவம் மற்றும் நேர்மை இவற்றைக்கொண்டு அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையில் வரலாற்று ரீதியிலான நீடித்த நல்லுறவினைக் கட்டியெழுப்ப வேண்டும்” எனக் கூறினார்.


தொழில்நுட்ப மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு, நடிகர் அஜித் சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் தொடர்பான கண்காட்சி மற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், சென்னையிலிருந்து ஒரு மாணவர் குழுவினர் குறித்த போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், நடிகர் அஜித் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நாளொன்றிற்கு ஆயிரம் ரூபாவை பல்கலைக்கழக நிர்வாகம் சம்பளமாக வழங்கியுள்ளது. குறித்த சம்பளத்தை தொழில்நுட்பத்துறையில் பயிலும் எழை மாணவர்களுக்கு வழங்குமாறு அஜித் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.


சுதந்திர கட்சியின் வீழ்ச்சிக்கு ஐ.தே.க.வே காரணம்: ஜீ.எல்.பீரிஸ்

தற்போதுள்ள அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலவீனமடையுமென,பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அமைச்சரவை மாற்றம் பல்வேறு தரப்பினருக்கும் சாதகமாக அமையுமென எதிர்பார்த்திருந்த போதிலும், ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே அதன் பயனை பெற்றுக்கொண்டுள்ளது. அதாவது இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி வலுவடைந்துள்ளது. இவ்வாறு நாட்டின் அனைத்து செயற்பாடுகளிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலம் குன்றி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மாணவர்கள் இடையூறுகளை புறம்தள்ளி கல்வியில் முன்னேற வேண்டும்: பன்னீர்செல்வம்

மாணவர்கள் இடையூறுகளை புறம் தள்ளி சவால்களை வெற்றி கொள்ள வேண்டுமென, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175ஆவது ஆண்டு விழாவில் பேசி அவர், அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கூறினார். இதேவேளை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு பரீட்சையை எழுதும் மாணவர்களுக்கான பரீட்சை நிலையங்கள், அவர்களின் மாநிலங்களை விடுத்து வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இப்பரீட்சையை பெருமளவில் ஏழை மாணவர்களே எதிர்நோக்குவதால், வேறு மாநிலத்திற்கு சென்று பரீட்சை எழுதுவதில் பணச் சிக்கல் மற்றும் போக்குவரத்து, தங்குமிட பிரச்சினைளையும் மாணவர்கள் எதிர்கொள்வதாக  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டு கல்வியில் முன்னேற வேண்டுமென துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


யேமனில் மீண்டும் ஆரம்பிக்கும் கொலரா நோய்

யேமனில்  பருவகாலமழை ஆரம்பமாகவுள்ள நிலையில் மீண்டும் கொலரா நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சர்வதேச பத்திரிகை ஒன்றின் முன்னணி எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் யேமன்- சவுதிஅரேபிய யுத்தத்தின் போதான தாக்குதலினால் யேமன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யேமனில் இவ்வாறான நோய்களின் தாக்கமும் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நோய் பற்றி கூறுகையில் இது யேமனில் பரவும் மிகக் கொடூரமான நோய் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயானது நாட்டின் பல பகுதிகளில் பரவும் எனவும் இம்முறை இந்நோயினால் 14 மில்லியன் பேர் வரைப் பாதிக்கப்படலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். யேமனில் கடந்த 2016 இல் ஏற்கனவே இந்த கொலரா நோய் பரவியிருந்த காலகட்டத்தில், யேமன் 2000 க்கும் அதிகமான உயிரிழப்பினைச் சந்தித்தது. இந்நிலையில் இந்தக் கொடிய நோயானது ஆரம்பமாகவுள்ள புதிய மழைக்காலத்தில் மீண்டும் பரவவுள்ளதாகமேலும் படிக்க…


பெண்கள் தலைமையில் இந்தியா முன்னேற்றம் காண்கிறது: பிரதமர் மோடி

பெண்கள் தலைமையில் இந்தியா முன்னேற்றமடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அம்மாநில பா.ஜ.க.நிர்வாகிகளோடு நேற்று (வியாழக்கிழமை) அவர் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது பேசி அவர், பெண்கள் முன்னேற்றம் என்ற பாதையிலிருந்து விலகி பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற பாதையை நோக்கி இந்தியா பயணிப்பதாக கூறினார். அத்துடன் திறமையான பெண்களுக்கு தமது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக கூறிய பிரதமர், அதற்கு எடுத்துக்காட்டாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை உதாரணம் காட்டியிருந்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு பிரதான கட்சிகளின் பிரச்சாரங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மோடி மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் யுத்தகால அநீதிகள் குறித்து செய்திகள் வெளியிடமுடியாத நிலை- ஜே.எஸ். திசநாயகம் சுட்டிக்காட்டு

2015 இல் தேசிய அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் இலங்கையின் பத்திரிகை சுதந்திர நிலை மேம்பட்டுள்ளது என  பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தனது பட்டியலில் எல்லைகளற்ற நிருபர் அமைப்பு தெரிவித்துள்ள போதிலும் உண்மை வேறானதாக காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அச்சுறுத்தப்படுகின்றனர், பத்திரிகை ஆசிரியர்கள் சுயதணிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். இது தவிர கண்காணிப்பும் காணப்படுகின்றது. இலங்கையில் தனது ஊடக கடமையை நிறைவேற்றியமைக்காக சிறைவாசம் அனுபவித்து தற்போது வெளிநாட்டில் அரசியல் புகலிடம் பெற்றநிலையில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகம் எழுதிய கட்டுரையிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018 இல் பத்திரிகையாளர்கள் செயற்படுவதற்கான சூழல் பாதுகாப்பானதாக காணப்படுகின்ற போதிலும் கொலைகளும் கடத்தப்படுவதும் இல்லை என்பது பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பிடுவதற்கான பூரணமான சுட்டியாக காணப்படாது. 2009 நடுப்பகுதிமேலும் படிக்க…


அமைச்சரவை மாற்றம் குறித்து அதிருப்தி: ஜனாதிபதி- பிரதமர் சந்திப்பு

அமைச்சரவை மாற்றம் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடவுள்ளார். அதன்படி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரமளவில் நடைபெறும் என ஐ.தே.க. வட்டாரத் தகவல்கள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நியமனங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்த, கட்சி ஆதரவாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் பிரதியமைச்சராக அலி சாகீர் மௌலானா நியமிக்கப்பட்டமையே இதன்போது குறிப்பாக விமர்ச்சிக்கப்பட்டிருந்தது.


ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகின்ற நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகின்ற நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள அவர் சென்னையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் வேலூர் செல்ல உள்ளார். சென்னையில் அவர் இருநாட்களும் ஆளுநர் மாளிகையில் உள்ளநிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிலும் குருநானக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளவுள்ளதுடன் சில புதிய அரசு கட்டிடங்களையும் திநற்து வைக்கவுள்ளார். இந்தநிலையில் அவரது பாதுகாப்பிற்காக 3,500 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


அரசியல் கைதிகள் விடுவிப்பு சந்திரிக்காவின் பரிந்துரையை நிராகரித்தார் மைத்திரி

தன்­னைக் கொலை செய்ய முயன்ற குற்­றத்­துக்­காக நீண்­ட­கா­லம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு வெசாக்கை முன்­னிட்டு மன்­னிப்பு வழங்குமாறு, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க விடுத்த வேண்­டு­கோள், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதியாக  சந்­தி­ரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா பதவி வகித்­த ­போது, அவர் மீது தாக்­கு­தல் நடத்தத் திட்­ட­ மிட்ட, உத­விய குற்­றத்­துக்­காக தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட் டுள்­ளது. சந்­தேக நபர்­க­ளாக மிக நீண்ட கால­மாக சிறை­வா­சம் அனு­ப­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே அவர்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப­ளிக்­கப்­பட்­டது. இந்த நிலை­யில், வெசாக்கை முன்­னிட்டு அவர்­களை மன்­னிப்­பில் விடு­விக்­கு­மாறு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா  கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் அவர் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். இது­வ­ரை­யில் அவ­ரது கோரிக்­கைக்குமேலும் படிக்க…


பாத வெடிப்பு உங்கள் அழகை குறைக்கின்றதா?

பாதங்களில் குதிகால் பகுதிகளில் ஏற்படும் வீரல்கள் தான் பாத வெடிப்பு.  இது இயற்கைதான். பாதமானது நமது முழு உடல் சுமையையும் தாங்கிக் கொண்டு நடக்கின்றது.  நாம் நடப்பதற்கு பயன்படுத்தும் சாலைகள் மற்றம் செருப்புகள் தினமும் நம் பாதங்களை உரசுகின்றது.  செருப்பு தேய்ந்து போகின்ற மாதிரி பாதமும் தேய்ந்து போனால் நம் கதி என்ன?  இதனால் தான் பாதம் தினம் தோறும் தேய்மானத்திற்கு ஏற்றவாறு வளருகின்றது. அவ்வாறு தேய்ந்து போன இறந்த திசுக்கள் காய்ந்து வெடித்துவிடுகின்றது.  பின் நம் கையாலோ அல்லது தானாகவோ இறந்த தசைகள் வெளியேற்றப்படும்.   இந்த பாத வெடிப்பு நிகழ வெப்பம், தூசு, அழுக்கு, பித்தம் போன்றவைகளும் காரணம்.  எந்நேரமும் பாதத்தை ஈரப்பதமாகவும் அதே சமயம் சற்று உலர்வாகவும் வைத்துக்கொண்டால் வெடிப்புகள் தோன்றாது. அப்படி தோன்றிவிட்டாலும் அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.  தன்மேலும் படிக்க…


காதலும் கடந்து போகுமாம்!

காதலும் கடந்து போகுமாம்..! கடந்து விடலாம் காதலை.. ஆனால் விட்டு சென்ற நினைவுகளை..?? காதலும் கடந்து போகுமாம்..! கனவுகளை அழித்துவிடலாம்.. கனவுகளில் மிதந்த நாட்களை..?? காதலும் கடந்து போகுமாம்..! மறந்துவிடலாம் ஏற்பட்ட காயங்களை.. ஸ்பரிசங்கள் கொடுத்த உணர்வுகளை..?? காதலும் கடந்து போகுமாம்..! வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களாக.. பழைய பக்கங்களை புரட்டினால்..?? காதலும் கடந்து போகுமாம்..! மறந்துவிடலாம் உறவின் முகத்தை.. உறவு கொடுத்த தைரியத்தை..?? காதலும் கடந்து போகுமாம்..! கசந்து போகலாம் புன்னகைகள்.. புன்னகை கொடுத்த துள்ளல்களை..?? காதலும் கடந்து போகுமாம்..! வெறுத்துவிடலாம் அந்த பார்வைகளை.. கடைக்கண் பார்வைக்காக ஏங்கிய ஏக்கத்தை..?? காதலும் கடந்து போகுமாம்..! தவிர்க்கலாம் பகலில் சந்திப்பதை.. இரவில் நிலவோடு போராடும் போராட்டத்தை..?? காதலும் கடந்து போகுமாம்..! மலர்ந்த மொட்டுக்கள் வாடலாம்.. விட்டுச்சென்ற வாசனை..?? காதலும் கடந்து போகுமாம்..! கடந்தாலும் கடக்காததே காதல்..!! காதலை கடந்துமேலும் படிக்க…


நகைச்சுவை துணுக்குகள்

கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க? என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான். டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம். இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு??????? படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்… யார்..வில்லனா? கதாநாயகனா?.. தயாரிப்பாளர்.. அப்பா: “ரேங் கார்ட் எங்கடா?” மகன்: “இந்தாங்கப்பா ரேங் கார்ட்” அப்பா: “அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா” மகன்: “சரிடா மச்சான், கையெழுத்து போடு” “பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?” “லோராண்டி ன்னு வச்சிருக்கோம்” “என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே” “என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம்மேலும் படிக்க…


ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்திகள்

இலங்கை மயைகத்தில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்தி கள் பூத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பொத்தி வளர்ந்துள்ளது. இதனை தற்போது காண மக்கள் படையெடுத்து வருகின்றனர்.


குட்டித்தூக்கம் நல்லதா கெட்டதா?

நம்மவர்களில் நிறைய வகையான ஆட்கள் உள்ளனர். அதில் இந்த தூங்குமூஞ்சி பழக்கம் உடையவர்கள் உள்ளனர்.  சிலர் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அன்றாட வேலைகளை பார்ப்பார்கள்.  சிலர் 7 மணி வரைக்கும் நன்றாக உறங்கிவிட்டு மெதுவாக எழுந்து வேலை செய்வார்கள்.  அவரவர் இரவு வேலை பகல் வேலையைப்பொறுத்து அவரவர் தூக்கமும் அமைகின்றது. மொத்தத்தில் ஒரு மனிதன் நன்றாக 24 மணிநேரத்தில் எட்டு மணி நேரம் உறங்கவேண்டும். இவ்வாறு உறங்கினால் தான் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைக்கும். இதை விட இன்னொரு பழக்கம் உள்ளவர்கள் உள்ளனர் அவர்கள் எங்கடா நேரம் கிடைக்கும் அப்படியே கொஞ்சம் கண்ணயரலாம் என்று அலுவலகத்தில், பாடசாலைகளில், பேருந்து பயணங்களில் என்று பகல்வேலைகளில் உறங்குகின்றனர்.  இது தவறா? ஒரு பூனை தனது ஒரு நாளில் 15 மணிநேரத்திற்கும் அதிகமாக உறங்கியே கழிக்கும்.  அதனால் தான் அதன் சுறுசுறுப்புமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !