Main Menu

கவியரசு கண்ணதாசன் – 17/10/2015

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நீ!
பட்டி தொட்டிகளும்
அறிந்த பாமரக் கவிஞன்

திரைப் படத்திற்காக
அழகிய வார்த்தைகளை
கோர்த்து பாடலாக்கியவன்

அதில் வாழ்க்கையும்
இணைத்துப் பாடமாக்கியவன்

நாத்திக நதியில்
நீந்தத் தொடங்கிய
நீ
ஆத்திகக் கடலுக்குள்
மூழ்கி முத்துக்கள் எடுத்து
ஆரமாக்கி அழகு பார்த்தது
அதியசம்தான்!

நிலையாமையை தத்துவங்களை
நிலைக்கும் வண்ணம்-
இன்றும் நினைக்கும் வண்ணம்
சொன்னவன் நீ?

காதல் ரசம் சொட்டும்
பாடல்களையும் படைப்பாய்!
பக்தி மணம் கமழும்
பாடல்களையும் சமைப்பாய்!

ஒரு கோப்பையில்
குடியிருந்தபோதும்
உன் கவிதைகள்
ஒருபோதும்
தள்ளாடியதில்லை

கலைத் துறையில்
பல அவதாரங்கள்
எடுத்தவன் நீ?

அரசியல் உன்னை
அரவணைக்கவில்லை?

ஆனாலும்
எந்த அரசியல் தலைவரும்
உன்னை வெறுத்ததில்லை

காவியத் தாயின் தலைமகனே!
உன் நினைவு நாளில்
உன் வரிகளையே
உனக்கு காணிக்கை ஆக்குகிறோம்

நீ நிரந்தரமானவன் அழிவதில்லை!
எந்த நிலையிலும்
உனக்கு மரணம் இல்லை!

பகிரவும்...