Main Menu

ஈழத்தின் தைப் பொங்கல் கவிதை

அதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு
இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு

சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து
கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி

வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும்,
சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க
கரும்பும் வாழைப்பழங்களும்
இனிப்பு பலகாரமும் ஒரு பககம் இருக்க

மூன்று கல்வைத்து அதில் விறகு வைத்து கற்பூரம் கொண்டு
தீ மூட்டி இறை வழிபாட்டுடன் புதுப்பானை அதிலிட்டு

அரிசியை அள்ளி ஆதவனை வணங்கியே
அப்பாவைத்தொடர்ந்து
அனைவரும் பானையிலிட்டு
தேனும் சர்க்கரையும் பாலும் சேர்த்து

தித்திக்கும் பொங்கல் செய்து
ஞாயிறுக்குப் படைத்து
பட்டாசுகள் விண்ணைப்பிளக்கும்
ஓசையுடன் வெடிவெடித்து

அயலவர் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் என்று கூடி
கொடுத்துப்பரிமாறி ஒன்றாயிருந்து
உழவருக்கு நன்றி சொல்லி

மகிழ்ச்சிவெள்ளத்தில் மகிழ்ந்த அத்திருநாள்.

நினைக்கையில் நெஞ்சம் கொஞ்சம் வேதனை தருகிறது
நிலையற்ற வாழ்வால் நித்தமும் பொங்கல் முற்றத்தில் நிலையாகின்றது..
தனிஈழத்தின் தரணியில் அலையென மக்கள் பொங்கும் நிலை.

பகிரவும்...