Main Menu

“ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி ” (05.10.2019)

அகரம் எமக்குக் கற்றுத்தந்து
சிகரமாய் எமை ஏற்றி வைத்து
சிற்பியாய் எமைச் செதுக்கி
ஏணியாய் ஏற்றி வைத்த
எங்கள் ஆசான்களே
ஆசிரியர் தினமாம்
அக்டோபர் ஐந்தில்
உங்களைப் போற்றுகின்றோம் !

நல்லவராய் வல்லவராய் நாம்வாழ
நல்லொழுக்கம் கற்றுத் தந்து
பாடங்களை எமக்காக நீங்கள் கற்று
பண்போடு எமக்களித்தீர்
பண் பாடி மகிழ்கின்றோம்
பரவசம் அடைகின்றோம்
ஆசிரியர் தினமதில் அன்போடு
அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்றோம் !

அன்பு காட்டினீர்கள்
அறத்தைப் போதித்தீர்கள்
அரவணைத்துச் சென்றீர்கள்
அறியாமையைப் போக்கினீர்கள்
அகிலத்தில் எனை அடையாளப்படுத்தினீர்கள்
அன்போடு நினைத்திடுவேன் உமை என்றும் !

ஆசிரியத்துக்குள் நானும் இணைந்து
பணியின் சுகமான சுமையோடு
மாணவிகள் குழாமோடு
மகிழ்வாய் பயணித்தேன்
மனநிறைவோடு பணியாற்றினேன்
மனதை நிறைத்த பொற்காலம் அது
மனமின்றிப் பிரிந்தேன் தாய்நிலத்தை விட்டு
மீண்டும் வாராதோவென ஏங்குகின்றேன் !

ஆனாலும் புலம்பெயர்ந்தும்
என் விடாமுயற்சியும் முனைப்பும்
ஜேர்மன் மொழியில்
சிறுவர் பள்ளியில்
ஆசிரியப் பணியோடு
தொடர்கின்றேன் இன்றும்
சுகமான சுமையாகவே
ஆசிரியர் தினமதில்
ஆசான்கள் அனைவரையும்
அகம் மலர வாழ்த்துகின்றேன்
வாழ்க வளமுடன் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...