“ மார்கழியின் மாண்பு “
மாதங்களிலே பிரமாதம்
மகத்துவமான மார்கழி மாதம்
மாதங்களின் சுவாசம் இது
மலர்களின் வாசமும் இது
மழையும் பொழிந்திடும் மாதம்
மனமும் மகிழ்ந்திடும் மாதம்
பாவை நோன்பும் நோற்றிடும் மாதம்
பள்ளியெழுச்சியும் பாடிடும் மாதம் !
ஆலயங்களும் களைகட்டும்
ஆலய மணியும் ஒலியெழுப்பும்
ஆரவாரம் மிகுந்திருக்கும்
ஆண்டாள் புகளும் நிலைத்திருக்கும்
ஆயிரம் பாடல்களும் எதிரொலிக்கும்
ஆறுகள் குளங்கள் நிறைந்திருக்கும்
அறுவடை காலமும் களைகட்டும்
ஆனந்த மாதம் மார்கழியே !
கன்னியர் எல்லாம் நீராடும் மாதம்
கண்ணபிரானைத் தொழுதிடும் மாதம்
கணபதியையும் வணங்கிடும் மாதம்
பிள்ளையார் கதையும் வந்திடும் மாதம்
எண்ணிய எண்ணங்களும் ஈடேறும் மாதம் !
வைகுண்ட ஏகாதசியும் வந்திடும்
சொர்க்க வாசலும் திறந்திடும்
திருவெம்பாவையும் திருப்பாவையும் ஒலித்திடும்
திருவாதிரையும் பிள்ளையார் கதையும் வந்திடும்
பெருமைகள் கூறும் மாதம் மார்கழியே !
வாசல்கள் தோறும் கோலங்கள்
கோலத்தின் நடுவே கும்பம்
கும்பத்தின் மீது பூசனிப்பூ
எழிலாக காட்சி தரும் மாதம்
ஏற்றம் மிக்க மாதம் மார்கழியே !
நான் பிறந்ததும் மார்கழியே
நாவலர் பிறந்ததும் மார்கழியே
மகாகவி பிறந்ததும் மார்கழியே
மகான் இயேசு பிறந்ததும் மார்கழியே
மாட்சிமை மிக்கதும் மார்கழியே
ஆண்டின் இறுதி மார்கழியே
ஆடிக் கழிகிறது மார்……கழியே !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 27.12..2018