Main Menu

“ பெண்ணின் பெருமை “

மானிடத் தேர் ஓட
மனுக்குலம் வேரோட
சந்ததிகள் தழைத்திட
சந்தோசம் பெருகிட
சக்தியாய் வந்தவள் பெண்
பெண்ணின் பெருமை
மண்ணுக்குப் பெருமையே !

பெண்ணே உலகின் கண்
நாட்டையும் வீட்டையும்
ஒளி ஊட்டுபவள் பெண்
விண் மீன்களுக்கு நிகரான
மண்ணுலகின் ஒளிக்கீற்று பெண்
பெண் இல்லா ஊரில்
பேய் கூட வாழாதே
பெண்ணில்லா உலகம்
மயான பூமியே !

பகலவன் இன்றி பூமி சுழலாது
பெண்ணின்றி பூவுலகே இயங்காது
படைப்புலகின் பிரம்மா பெண்
பண்பின் சிகரம் பெண்
பாசத்தின் சுரங்கம் பெண்
பொறுமையின் இலக்கணமும்
பெண்ணே பெண்ணே
பெண்ணின் பெருமையை
பேசிடத் தான் முடியுமா ?

குடும்பத்தின் குத்துவிளக்காகி
குலமகளாய் மருமகளாய்
தாயாய் தாரமாய்
தாதியாய் தலைவியாய்
பல பரிணாமங்களில்
வலம் வந்து
பெண் இனத்திற்கே
பெருமை சேர்க்கிறாள் !

பெண்ணே தடைகளைத் தகர்த்து
விடைகளைக் கண்டு
வீறு கொண்டெழுந்து
சாதனை செய்து
புது சரித்திரம் படைத்து
உரிமைகளைப் பெற்று
பெருமையோடு வாழ்ந்து
பெண்ணின் பெருமையை
மண்ணிலே பறை சாற்றிடு !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 07,03,2019