சர்வதேச பெண்கள் தின சிறப்புக்கவி
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
சிறைப்பட்டது போதும்
சீக்கிரமாய் புறப்பட்டு விடு
சிகரத்தைத் தொட்டு விட
வீட்டுச் சிறையை உடைத்தெறி
விண்ணை எட்டப் புறப்படு
எழிற்சி கொண்டு ஏற்றம் பெற்றிட
எழுந்துநில் உயர்ந்துசெல் பெண்ணே !
வானம் கூட வசப்படும் ஓர்நாள்
வாழ்வும் வளம் பெறும் உன்னால்
வானம் உனக்கு தூரமில்லை
நிலவை முட்டி வானில் ஏறு
சாதனை செய்து சரித்திரம் படை
பெண்ணே எழுந்து நில் உயர்ந்துசெல் !
மண்ணுலகின் மலரே
கண்ணுக்கு விருந்தானவள் நீ
கருத்திற்கு உரமானவள் நீ
இதயத்திற்கு இதமானவள் நீ
இன்பத்தின் சொர்க்கம் நீ
பார்வையால் சாதிப்பவள் நீ
பரிவினால் அணைப்பவளும் நீயே
பாவையே புதுமைகளைச் செய்து
புரட்சிப் பெண்ணாய் வாழ்ந்திடு !
ஆளப் பிறந்தவளே அழகோவியமே
விடியலைத் தேட விரைந்தெழு
விண்மீனாய் ஒளிர்ந்திடு
நிஜம் அறி புரட்சி செய்
துணிவோடு போராடு
வெற்றி நிட்சயம்
வீறு கொண்டு எழுந்து நில்
விந்தைகள் செய்து உயர்ந்து செல் !
-ரஜனி அன்ரன் (B.A) 08,03,2019