காமம் கலைந்த கண்ணீரோடு!
காதல் என்ற உணர்வு..
காமத்தின் துவக்கமா?
தேகம் என்ற உடல்..
மோகத்தின் முடிவுரையா?
இளமை என்பது நிரந்தரமல்ல..
இன்பமே என்றைக்கும் சாத்தியமில்லை..
நிலையில்லா காமத்தில் நீந்தாதே..
நிலையற்ற அன்பிற்கு ஏங்காதே..
பழமைக்கும்..புதுமைக்கும்..
வேறுபாடுண்டு.
பார் போற்றும் அன்பிற்கோ..
பாகுபாடில்லை..
உண்மைக்கும்,பொய்மைக்கும்,.
நடுவே தூரமுண்டு..
உறவுக்கும்..நட்புக்கும்..
என்றும் சாதலில்லை..
மெய்க் காதலின் பயணம் ..
மேனி தளர்ந்த பின் மாளும்..
உயிர்க் காதலின்பயணம்..
உயிருள்ள வரை தொடரும்..
சிகை வெளுத்து..சிங்காரம் கெட்டு.
மெய் கெட்டு..நோய் பட்டு..
தாய்மடி தேடும் தருணத்திலே..
தாயென வந்தாய் அருகினிலே..
உன் உடல் வெப்பத்தின் கதகதப்பு..
என் தாய்மடி கருணையின் அரவணைப்பு ..
மீண்டும் உணர்கிறேன்..
தாயின் கருவறை வெப்பத்தின் கதகதப்பை..
#காமம் கலைந்த கண்ணீரோடு#.
-ஆக்கம் சூர்யா.