Main Menu

எங்கள் தோழர் ( நினைவுக்கவி) கவியாக்கம் – ரஜனி அன்ரன்

மனிதத்தை நேசித்த மானிடன்
மனதிற்கு இனியவன்
மாசற்ற குணத்தோன்
கள்ளம் கபடம் ஏதுமில்லா
வெள்ளை உள்ளம் கொண்டவனை
பங்குனித் திங்கள் இரண்டில்
கவர்ந்து கொண்டானே காலனும் !

கன்னித் தமிழ் மேல்
தீராக் காதல் கொண்டு
தமிழை நேசித்த வாசகன்
பண்பிலும் பாசத்திலும் மிஞ்சியவன்
உள்ளத்திலும் உயரத்திலும் உயர்ந்தவன்
எண்ணத்தில் உதிப்பதை
எதுகை மோனையோடு எடுத்துரைப்பவன்
இன்றைய நாளில் நினைத்திடுவோம் நாமும் !

TRT வானொலியின் முகாமையாளன்
மேடைப்பேச்சாளன், மேடை நடிகன்
கவிப்பித்தன், இசைப்பிரியன்
தத்துவ வித்தகன், மிருதங்க கலைஞன்
கலை,இலக்கியம், மேடையென
வாழ்வையே அர்ப்பணித்தவன் !

நேயர்களாகிய எம்மை
கவிக்களத்தில் சமர்க்களம் போடவைத்தவர்
கலசத்தில் பதில் தேட வைத்தவர்
கேள்வி நேரத்தில் புதிர் போடுபவர்
அகராதியைப் புரட்ட வைத்தவர்
பாதிவயதில் காலனும் பறித்தானே
இன்றைய 9 வது ஆண்டு நினைவு தினத்தில்
நாமும் எமது தோழரை நினைவு கூருகின்றோம் !

கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A) 02.03.2019

பகிரவும்...
0Shares