” அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி “
ஆண்டவனின் உன்னத படைப்பு அன்னை
அன்னை இல்லா உயிர்கள் ஏது
அவளை நினையா மனங்கள் தான் ஏது
அகிலத்தில் எமை ஈன்ற அன்புத்தெய்வம்
அரவணைப்பில் அனைவரையும் மிஞ்சி
அகமும் மனமும் குளிர வைப்பவள் அன்னை !
கருவினில் தாங்கி
உருவினைத் தந்து
உருவாக்கிய அன்னை
உறவுகளுக்கெல்லாம் பாலமாகி
உண்மை அன்பை மட்டுமே
அள்ளி வழங்கும் அமுதசுரபி !
உயிருக்குள் இன்னொரு உயிரை
உன்னதமாய் சுமக்கும் உத்தம ஜீவன்
உயிர் தந்த தேவதை
உயிர் எழுத்தின் உண்மைப் பொருள்
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும்
உயர்வாய் நிற்கும் உன்னத உறவு அன்னையே !
அன்னைக்கு இணையான உறவு
அவனியில் ஏதும் இல்லையே
அன்னைக்கு இணை அன்னையே
அன்னையே ஒரு கவிதை
அம்மா என்ற வார்த்தைக்குள்
அகிலமே அடக்கம்
அனைத்து அன்னையர்களுக்கும்
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 12.05.2019