“TRT தமிழ் ஒலிக்கு வெள்ளிவிழா வாழ்த்துக்கவி”
தேன்மதுரத் தமிழை தேசமெங்கும் தவழவிட்டு
தமிழ் வாசம் வீசும் தமிழ் ஒலியே
நேசமாய் உறவாடி
வீசும் தென்றல் காற்றோடு
வெள்ளிவிழாக் காணும் வேளை
அள்ளி அணைக்கிறேன் உன்னை
வாழ்க பல்லாண்டு வளமோடு நீ !
அறிவிற்கு விருந்தானாய்
ஆற்றலுக்கு வழி சமைத்தாய்
தேடலுக்கு களம் அமைத்தாய்
தெளிவினைப் புரிய வைத்தாய்
உற்றதொரு தோழியானாய்
உறவிற்கு பாலம் அமைத்தாய்
உளமார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு நீ !
அறிதலும் புரிதலுமாய் அரசியல் களமாய்
எண்ணும் எழுத்துமாய் ஏற்றமிகு கலசமாய்
கேள்விக்கணைகளாய் தேனும் பாலுமாய்
பாடிவரும் தென்றலாய் முழங்கும் கவிக்களமாய்
குறுக்கெழுத்துப் போட்டியாய் வாதக் களமாய்
தாறுமாறென தரமான நிகழ்வுகளை
அள்ளித் தந்த தமிழ்ஒலியே
வாழ்க பல்லாண்டு வளமோடு நீ !
ஆண்டுகள் இருபத்தி ஐந்தாக
பயணிக்கிறேன் நானும் உன்னோடு
நீயின்றி நானில்லை
நீயே என் சுவாசம் !
கவியாக்கம் ரஜனி அன்ரன் (B.A) 14.01.2022
பகிரவும்...