Main Menu

“ஈகைப் பேரொளி”(முருகதாசன் நினைவுக்கவி)

முருகதாசன் என்ற முழுநிலவு
மாசித் திங்கள் பன்னிரெண்டில்
மூச்சுக் காற்றை நிறுத்தி
ஆண்டுகள் பதினொன்று
ஓடியே விட்டது
ஆனாலும் அந்த ஈழநிலா
நமக்கு ஏற்படுத்திய வெப்பம்
தணலாக கொதிக்கிறதே இன்றும் !

துன்னாலையில் உதித்த முத்தே
தமிழ் நிலத்தின் சொத்தே
தமிழ் மக்கள் பட்ட அவலங்களை
ஆற்றொணாத் துயரங்களை
அலங்கோலங்களைக் கண்டு
ஐ..நா..முன்றலிலே
அனலில் குளித்தாயே
மாசித் திங்கள் பன்னிரெண்டிலே !

இன்னுயிரை அக்கினிக்கு இரையாக்கி
ஈகம் செய்த முருகதாசனின் தியாகத்தை
முழுமூச்சாய் நின்ற மூர்க்கத்தை
முனைப்போடு செயற்பட்ட வீரத்தை
எப்படி மறப்போம் நாம் ?
நினைவிற் கொள்வோம் என்றும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...