வாலி என்ற வானம்பாடிக் கவிஞன்
நீ
கற்பனையின்
சிறகுகளை
கட்டவிழ்த்து….
கவிதை வானில்
பாடித் திரிந்தது…
அமிழ்ந்த சூரியன்
உமிழ்ந்த கதிர்களால்
தங்கமாய் மாறிய
மேகக் கூட்டங்களில்…..
ஓரு வானம்பாடி
பாடிப் பாடி
பாய்ந்து பறப்பது
போன்று தெரிந்து.
உன் மறைவால்
இன்று
எல்லாம்
மறைந்து போனது
மகிழ்வின்
ஆத்மாவுடன்
உன் போட்டிப் பயணம்
ஆரம்பமானதோ…?
நீ
கற்பனையில்
பறக்கும் போதும்…
கவிதை வானில்
மிதக்கும் போதும்…..
உன்னைச் சுற்றி
ஒளிர்ந்த வெளிச்சம்
உன் மறைவால்
இன்று
எல்லாம்
மறைந்து போனது
பகல் வெளிச்சத்தில்
மறைந்து போன
சொர்க நட்சத்திரங்கள்
சொரியும் ஒளி போல…
உன் மறைவால்
இன்று
எல்லாம்
மறைந்து போனது
ஆகாயத்தின்
அத்தனை வண்ணங்களும்
அழிந்து போனதே….
கவிதை வானம்
களையிழந்து…….
கலைந்து போனதே
வெள்ளிக் கோளத்தில்
உருக்கிய அம்புகள் போல
உன் சந்தோசக் கீறல்கள்
சினிமா சங்கீதங்கள்
வெள்ளை விடியலில்
குறையும் விளக்கு ஒளியாய்
பார்வையில் தெரியவில்லை
ஆயினும்
இதயத்தின்
பார்வையில் உணர்ந்தோம்
இரவில் அலையும்
ஓர் ஒற்றை மேகம்
சொர்கத்தின் வெளியே
பொழியும்…….
நிலவின்
வெளிச்சக் கதிர்களாய்
இந்தப் பூமியும் காற்றும்
உன் வார்த்தைகளில்
வலிமை கொண்டது
இனிமை கண்டது
என்ன கலை
உன்னிடம் உள்ளது…?
எதைப்போன்று
நீ இருந்தாய்…?
எதையும் நாமறியோம்
ஆயினும்
வானவில்லை விட்டு
மேகங்கள் ஓடுவதில்லை
உன் கவி மழையின்
மெல்லிசையில்…
நாங்கள்
பிரகாசிக்கும் துளிகள்
சுவாசிக்கும் ஜீவன்கள்
நீ
இவ்வுலகின்
அச்சம் அகற்றிட
நம்பிக்கைப் பற்றி
சிந்தனை ஒளியில்
புதைந்து கொண்ட
வானம்பாடிக் கவிஞன்……….
வாலி என்றும் நீ வாழி!