ரோஜாப்பூக்கள் – ப்ரியா
உலகில் எங்கெங்கோ
பிறந்திருந்தும்
இந்த உலகம் முழுவதும்
சுற்றி வந்தோம்….!!
எங்கள் வாசத்தால்
இந்த உலகத்தையே
கவர்ந்தோம்…!
காதல் சொல்ல
அந்த கரங்கள் பிடிக்க
எங்கள் உதவி பெறாதார்
எவருமில்லையென்று
பெருமை கொள்வோம்…..!!
இரண்டு மனங்கள்
இணையுமிடத்தில்
அவர்கள் அன்பின்
முதல் வெளிப்பாடும்
நாங்களே….!!
எங்களை ரசித்தகணம்
மனதின் சோகங்களும்
மாண்டுபோகும்…..
வண்ணங்களின்
அணிவகுப்பாகவும்
தென்றலின் தோழியாகவும்
நந்தவனங்களின் அழகாகவும்
காட்சியளிக்கிறோம்….!!
பார்ப்பவர்களின்
மனதை கொள்ளையடித்து
ஆட்சி செய்கிறோம்…….
காணும் மனங்களின்
மகிழ்வாகவும்
சங்கமிக்கும் மனதின்
பொக்கிஷமாகவும்
நாங்கள்……!!
வாழ்த்து சொல்ல
வழியனுப்பி வைக்க
எங்களை தந்தீர்…..
அமரருக்கும்
மற்றனைவருக்கும்
பாரபட்சமின்றி
எங்களையே தந்தீர்
மலர்களிலே இளவரசி நாங்கள்
“ரோஜாபூக்கள்”………!!!!!