இலங்கை
இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்
ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்றது. ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்துமேலும் படிக்க...
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை: அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது
சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கண்காணிப்பகம் கோரியுள்ளது.மேலும் படிக்க...
எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கோரல்மேலும் படிக்க...
எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள்: ஐ.தே.க
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டன என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. தற்போதே எங்களின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கேட்பதுமேலும் படிக்க...
த. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள காணாமல் ஆக்கப்பட்டமேலும் படிக்க...
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்ட வேண்டும் என வலியுறுத்த கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையமாறு “அக்கரையில் நாம் “ என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) ஏற்பாடு மேலும் படிக்க...
ஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்படுவதை தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி கோத்தபாயவின் பயணத்தை தடுக்க முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பின்வரிசை உறுப்பினர் களும் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் கோரிக்கை விடுத்து வருகின்றமேலும் படிக்க...
தமிழர்கள் மீண்டும் ஏமாறமாட்டார்கள் : பந்துல
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை நம்பி, தமிழ் மக்கள் மீண்டுமொரு முறை ஏமாறமாட்டார்கள். இலங்கையர் என்ற அடிப்படையில் சம உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவான மாற்றமொன்றையே அவர்கள் விரும்புவார்கள்.மேலும் படிக்க...
ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..?: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு இன்று திங்கட்கிழமை கூடுகிறது. இந்த பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. இதன்போது எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து விசேடமேலும் படிக்க...
மஹிந்த தற்போது முழு நாட்டையும் ஏமாற்றியுள்ளார்: சந்திராணி பண்டார
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அமெரிக்க குடியுரிமையை நீக்காமல் அவரை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது நகைப்புக்குரியதாகவே உள்ளது. இது மக்களின் கண்களை மூடும் செயற்பாடாகும். மஹிந்த ராஜபக் ஷ முழு நாட்டையும் ஏமாற்றமேலும் படிக்க...
கோத்தபாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்அல்ல. அவர் எப்போதும் வன்முறையைப் பாவிக்கக் கூடியவர் என்பதால் அவரைப் போன்றவர்கள் வருவது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாகவே அமையும் என வடக்குமேலும் படிக்க...
அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்
நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.. மேலும் கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
மீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்
இலங்கையின் சிலாபம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 13 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலிய எல்லை அருகே சென்ற 13 இலங்கையர்களும், சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டு இலங்கை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம்மேலும் படிக்க...
எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார
ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்கமேலும் படிக்க...
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்கு தற்போது தேவைப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மேலும், எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என்றும் அவர் கூறினார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
ராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தானே எனவும் தனக்கு பதிலாக, தனது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள் எனவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பதிலாக வேறொரு நபர் களமிறங்குவார் என வீண் வதந்திகளைப் பரப்பமேலும் படிக்க...
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்
இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உதிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்மேலும் படிக்க...
யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின் கடையொன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து இந்த தாக்குதலின்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை
உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்துக்கு அரசோ, அரசியல்வாதிகளோ இதுவரை நீதியானதும், உண்மையானதுமான விசாரணைகளை மேற்கொள்ளாது இருப்பதையிட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது கவலையை தெரிவித்துள்ளது.நாம் இந்த அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாவது நீதி நேர்மையுடன் பக்கச்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- 392
- …
- 433
- மேலும் படிக்க
