Main Menu

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்

வெளிநாட்டில்  தொழில்  புரியும்  இலங்கைப் பிரஜைகளுக்கும்  எதிர்வரும்  ஜனாதிபதி  தேர்தலில் வாக்களிப்பதற்கான   ஏற்பாடுகளை  செய்யப்பட்ட  வேண்டும் என வலியுறுத்த   கட்சி  பேதமின்றி  அனைவரையும்   ஒன்றிணையமாறு   “அக்கரையில்  நாம் “ என்னும்  அமைப்பு  அழைப்பு  விடுத்துள்ளது.  

மக்கள் விடுதலை  முன்னணியினரால் (ஜே.வி.பி)  ஏற்பாடு  செய்யப்பட்ட  ஊடகசந்திப்பு  இன்று  புதன்கிழமை   சமய  சமூக  நடுநிலையத்தில்  இடம்  பெற்றது.  

இதன்போது கருத்து  தெரிவித்த   பாராளுமன்ற  உறுப்பினர்  சுனில்  ஹந்துனெத்தி கூறியதாவது  ,  

தேசிய  வருவாயில்  பாரியளவிலான  பங்களிப்பை  வழங்குபவர்களாக வெளிநாட்டில் தொழில்  புரிவோர் விளங்குகின்றனர்.  அவர்களினால்   5  பில்லியன்  ரூபாய்க்கும்  அதிகளவிலான  வெளிநாட்டு வருவாய்கிடைக்கப்பெறுகின்றது.  இந்நிலையில்  அவர்களுடைய  உரிமையை  பாதுகாக்க  வேண்டியது எமது கடமையாகும். 

வெளிநாட்டில்  தொழில்  புரியும் நாட்டின்  பிரஜைகளுக்கு   எதிர்வரும்  ஜனாதிபதி  தேர்தலின்  போது வாக்களிப்பதற்கான  உரிமையை  ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது  அவசியமானதாகும்.  வெளிநாடுகளில்  தொழில் புரியும்  தமது நாட்டவர்களுக்கு  தேர்தலின்  போது    வாக்களிப்பதற்கான  வாய்ப்பை  115  நாடுகள்    ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.  

எமது நாட்டிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள்  2016  இல்  மேற்கொள்ளப்பட்டன.  

எனவே வெளிநாட்டில்  தொழில்  புரிவோருக்கும்  வாக்களிக்கும் உரிமையை  பெற்றுக்கொடுப்பதற்கு  வாய்ப்புக்கள்  அதிகளவில்  காணப்படகின்றன.  ஆகவே  , இதனை நடைமுறைப்படுத்துவதற்கு   ஏதுவான நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு  அனைத்து  கட்சி பேதமின்றி  அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

பகிரவும்...