Main Menu

ஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ

ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது.

அத்­துடன் சட்­டப்­பி­ரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி கோத்­த­பா­யவின் பயணத்தை தடுக்க முடி­யாது என்று ஜன­நா­யக இட­து­சாரி முன்னணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

கோத்­த­பாய ராஜபக்ஷ் எந்த கட்­சி­யையும் சேரா­தவர். அவர் பொது வேட்­பா­ள­ரா­கவே பொது­ஜன பெர­முன கட்­சியில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­கின்றார். கோத்­த­பா­யவை தோற்­க­டிக்கும் நோக்­கமே ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் இருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் இவர்கள் அனை­வரும் ஒரு அணி­யாக செயற்­பட்டு எமக்­கெ­தி­ராக பிர­சாரம் செய்­தனர்.

ஆனால் இம்­முறை இவர்­க­ளுக்கு அவ்­வாறு செயற்­பட முடி­யாது. ஏனெனில் கடந்த தேர்­தலில் இவர்கள் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­திகள் எத­னையும் கடந்த நான்­கரை வருட ஆட்­சிக்­கா­லத்தில்  நிறை­வேற்­ற­வில்லை. அதனால் மாற்­றத்தை எதிர்­பார்த்து வாக்­க­ளித்­த­வர்கள் இம்­முறை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வாக்­க­ளிக்­கப்­போ­வ­தில்லை. இதனை உணர்ந்­து­கொண்டே இம்­முறை  திட்­ட­மிட்டு மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யிட தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது. இதன் மூலம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்கள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு வாக்­க­ளிப்­பதை தடுக்­கலாம். இதுவே இவர்­களின் பிர­தான திட்­ட­மாகும்.

அத்­துடன் வாக்­க­ளிப்­பின்­போதும் முத­லா­வது தெரிவு மக்கள் விடு­தலை முன்­னணி என்றும் இரண்­டா­வது தெரிவு ஐக்­கிய தேசிய கட்சி என்றும் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றே பிர­சாரம் செய்­யப்­போ­கின்­றனர். இதன் மூலம் யாருக்கும் பெரும்­பான்மை கிடைக்­கா­மல்­போகும் சந்­தர்ப்­பத்தில், ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதே இவர்­களின் மற்­று­மொரு திட்­ட­மாகும்.

மேலும் சட்­டப்­பி­ரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை தடுக்­கவும் சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். கோத்­த­பா­யவின் பிரச்­சினை அர­சியல் பிரச்­சி­னை­யாகும். சட்­டப்­பி­ரச்­சினை அல்ல. அதனால் நீதிமன்றம் மக்களின் அபிலாஷைகளை உணர்ந்துகொண்டே அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதனால் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி ஒருபோதும் கோத்தாவின் பயணத்தை தடுக்க முடியாது என்றார்.

பகிரவும்...