Main Menu

கோத்­த­பாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்

பொது­ஜன  பெர­மு­னவின்  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜன­நா­யக ரீதி­யாகச் சிந்­திக்கக் கூடி­ய­வர்­அல்ல. அவர் எப்­போதும் வன்­மு­றையைப் பாவிக்கக் கூடி­யவர் என்­பதால் அவரைப் போன்­ற­வர்கள் வரு­வது தமிழ் மக்­க­ளுக்கு இருண்ட கால­மா­கவே அமையும்  என வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கோத்­த­பாய ராஜ­பக்­ச­விற்கு உண்­மை­யான எந்தத் தமி­ழரும் வாக்­க­ளிக்க கூடாது. ஏனென்றால் போர்க்­கா­லத்தின் இறு­திக்­கால கட்­டத்தில் நடந்­ததைப் பார்த்­தீர்­க­ளானால் வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு சர­ண­டைய சென்­ற­வர்­களே சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். அவ்­வாறு சர­ண­டையச் செல்லும் போது அங்­கி­ருந்த படை­யினர் இவர்­களை என்ன செய்­வது என்று மேலி­டத்தில் கேட்­டி­ருக்­கின்­றனர்.

அதற்கு மேலி­டத்தில் இருந்த அவர்கள் எல்­லோ­ரையும் சுட்டுத் தள்­ளு­மாறு செய்தி கிடைத்­தது. இது யாரிடம் இருந்த வந்­தது என்­பது பற்றி எனக்கு கூற முடி­யாது. ஆனால் எனக்கு தெரிந்த அள­விலே ஆகக் கூடு­த­லான அதி­காரம் பெற்­றி­ருந்த நபர் கோத்­த­பாய தான். ஆகவே அவர் கூறித் தான் இது நடந்­தி­ருக்க வேண்டும்.

அவ்­வாறு வெள்ளைக் கொடி ஏந்தி சர­ண­டைய வரும் மக்­களை உடனே கொன்று குவி­யுங்கள் என்று சொல்லக் கூடிய ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வந்தால் எங்­க­ளுக்கு என்­னென்ன நடக்­கு­மென்று நாம் யோசிக்க வேண்டும். வெள்ளை வான் எல்லாம் அவ­ரு­டைய காலத்­திலே நடந்­தது. அதனால் என்ன நடந்­தது என்­பதும் அனை­வ­ருக்கும் தெரியும்.

இதனால் அவ­ருக்கு எதி­ராக இரண்டு மூன்று வழக்­கு­களும் இருக்­கின்­றன. ஆகவே இவ்­வாறு எல்லாம் இருக்கும் போது எதற்­காக மகிந்த ராஜ­பக்ஷ அவரைப் போட்­டியில் இருக்க விடு­கின்­றாரோ என்று தெரி­ய­வில்லை. ஆனால் அவர் வரு­வதால் தமிழ் மக்­க­ளுக்கு இருண்ட கால­மாக மாறும் என்­பது மட்டும் நிச்­சயம்.

ஏனென்றால் அவரைப் போன்­ற­வர்கள் இந்த இலங்கை சிங்­கள பெளத்த நாடு என்­கின்ற அந்த எண்­ணத்தில் இருக்­கின்ற நபர்கள் தான். அதனை வலி­யு­றுத்­து­வ­தற்­காக வன்­மு­றையைப் பாவிக்கக் கூடி­ய­வர்­கள்­அ­வர்கள்.

ஆகவே அவர்கள் ஜனநாயக ரீதியாக சிந்திக்க கூடியவர்கள் அல்ல. எனவே தான் கோத்தபாயவிற்கு ஆதரவை வழங்குவதாக நான் ஒரு நாளும் கூறவும் இல்லை. ஆதரவு தெரிவிக்கவும்; கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு ஆகும் என்றார்.

பகிரவும்...