Main Menu

ராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தானே எனவும் தனக்கு பதிலாக, தனது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள் எனவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பதிலாக வேறொரு நபர் களமிறங்குவார் என வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் என, நாடெங்கிலும் பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தனது ஆட்சியில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன் என உறுதியளித்த அவர், தன்னைத் தமிழ்பேசும் மக்களின் எதிரியாகக் சித்தரித்துக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ஸ குடும்பமே எனவும் இத்தகைய ராஜபக்ஸ குடும்பத்தினரை, குற்றவாளிகள் என குறித்த அரசியல்வாதிகள் விமர்சிக்கின்றார்கள் எனவும் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து, ஜனாதிபதித் தேர்தலில் தான் வெல்வது உறுதி எனத் தெரிவித்த அவர், இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பாதுகாவலனாகவும் நல்லதொரு தலைவனாகவும் இருப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். 

பகிரவும்...